Posts

Showing posts from September, 2020

பரமத்தி வேலூரில் முக கவசம் அணிவதின் அவசியத்தை எடுத்துரைத்த காவலர்

Image
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பலர் கொரோனா பரவும் தீவிரத்தை உணராமல் தொடர்ந்து முககவசம் அணியாமல் பயணித்துக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் பத்மநாதன் அவர்கள் முக கவசம் அணியாதவர்களை நேரில் அழைத்து சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து முகக்கவசம் அணிவதின் அவசியத்தை பற்றி பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று நோய் பரவுவதை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் அவசியமற்ற பயணங்களை ரத்து செய்யும் படியும் தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும் படியும் அவர் அறிவுரை வழங்கினார்.

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் காற்றில் பறக்க விடப்பட்ட சமூக இடைவெளி

Image
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம் என அறிவித்தது.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து துறையின் மூலம் இயக்கப்பட்டு வரும் 50 சதவீத பேருந்துகள் மக்களுக்கு பற்றாக்குறையாக இருக்கிறது.  இதனால் அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரை சமூக இடைவெளி போன்றவை காற்றில் பறக்க விடப்பட்டது.  இதற்கு உதாரணமாக இன்று திருச்செங்கோடு அரசு பேருந்தில் மக்கள் நெருக்கமாகவும் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர் இதனால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

திருச்செங்கோட்டில் குறைந்த அளவு பயணிகளுடன் பயணித்த அரசு பேருந்துகள்

Image
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் இன்று அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கினர். இந்நிலையில் இன்று முதல் நாள் என்பதால் திருச்செங்கோட்டில் அரசு பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.  மேலும் இன்று நாமக்கல் மாவட்டத்தில் 50% அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. மேலும் வரப்போகின்ற நாட்களில் படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

Image
திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக இன்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு பொன் சரஸ்வதி அவர்கள் பேருந்து நிலையத்தில் வழங்கினார்.  மேலும் பேருந்தில் பயணத்திற்காக தயராக இருந்த பயணிகளிடம்  பாதுகாப்பாக சமூக இடைவெளியுடன் பயணிக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.