பரமத்தி வேலூரில் முக கவசம் அணிவதின் அவசியத்தை எடுத்துரைத்த காவலர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பலர் கொரோனா பரவும் தீவிரத்தை உணராமல் தொடர்ந்து முககவசம் அணியாமல் பயணித்துக் கொண்டிருந்தனர். 


இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் பத்மநாதன் அவர்கள் முக கவசம் அணியாதவர்களை நேரில் அழைத்து சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து முகக்கவசம் அணிவதின் அவசியத்தை பற்றி பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.


மேலும் தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று நோய் பரவுவதை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் அவசியமற்ற பயணங்களை ரத்து செய்யும் படியும் தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும் படியும் அவர் அறிவுரை வழங்கினார்.


Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்களே Bio Diesel பற்றிய ஒரு எளிய புரிதல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று திருச்செங்கோடு பகுதியில் பெய்த கன மழையில் அடித்துச் செல்லப்பட்ட முருகேசன் என்பவர் இன்று சடலமாக மீட்பு