திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் காற்றில் பறக்க விடப்பட்ட சமூக இடைவெளி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம் என அறிவித்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து துறையின் மூலம் இயக்கப்பட்டு வரும் 50 சதவீத பேருந்துகள் மக்களுக்கு பற்றாக்குறையாக இருக்கிறது.
இதனால் அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரை சமூக இடைவெளி போன்றவை காற்றில் பறக்க விடப்பட்டது.
இதற்கு உதாரணமாக இன்று திருச்செங்கோடு அரசு பேருந்தில் மக்கள் நெருக்கமாகவும் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர் இதனால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
Comments
Post a Comment