Posts

Showing posts from June, 2021

மக்களை தொடர்ந்து அலைக்கழிக்கும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு பணியாளர்கள்

Image
தமிழக அரசின் குறைந்த விலையில் மக்கள் பயன்படும் வகையில் அம்மா சிமெண்ட் எனப்படும் சிமெண்ட் மூட்டைகள் வீடு பழுதுபார்த்தல் மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் பெற்று வீடு கட்டும் நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் நல்ல தரமான சிமென்ட் மூட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக முன்பாகவே பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்ய இருப்பவர்கள் அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்களிடம் சிமெண்ட் மூட்டைகளை பெறுவதற்கு அதிகமாக அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். அதாவது இரண்டாவது முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகு அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது அதாவது அரசு ஊழியர்கள் 30% பணியாற்றலாம் என அறிவித்தது இருப்பினும் கடந்த 2 மாதமாக அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்கள் பணிக்கு திரும்பாததால் மோகனூர் மற்றும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கை நம்பி கட்டிட வேலையை ஆரம்பித்துள்ள மக்கள் தவித்து வருகின்றனர். தினமும் ஐந்து முதல் ஆறு நபர்கள் இந்த அம்மா சிமெண்ட் கிடங்கு வந்த வண்ணம் உள்ளனர். அ...

கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் நோய் தடுப்பு பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Image
நாமக்கல் நகராட்சி பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி நாமக்கல் நகராட்சி ரமேஷ் தியேட்டர் அருகில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை ஆய்வு செய்து வருகின்றனர்.  இப்பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மருந்து, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கிடைப்பது குறித்து ஆய்வு செய்தார். இதுபோல் R.P.புதூர், E.B காலனி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் ஆகியோர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணி நிறுத்தம் 50 லட்சம் செங்கற்கள் தேக்கம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், 50 லட்சம் செங்கற்கள் தேங்கியுள்ளன. நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தினமும், 5 லட்சம் செங்கற்கள் தயார் செய்யப்பட்டு கோவை, ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.   திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த பகுதிகளில் தங்கி, செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்நிலையில், கடந்த மாதம் முதல் முழு ஊரடங்கு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.  இதனால் கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய, 50 லட்சம் செங்கற்கள் தேங்கியுள்ளன.  செங்கல் தயாரிப்பதை பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இந்த பகுதியில் மட்டும், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலையிழந்து தவித்து வருகின்றன.  இந்நிலையில், க...

நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
நாமக்கல் மாவட்டத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை. அடுத்த மூன்று நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் லேசானமேகமூட்டத்துடன், சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.  காற்றின் திசை பெரும்பாலும் தென் மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு, 8 கி.மீ., என்றளவில் வீசும். காற்றின் ஈரப்பதம், 40.85 சதவீதமாக நிலவும். எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வில் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயர்ச்சி மற்றும் குடற்புண் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. எனவே பண்ணைகளில் பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதால் நீர் தெளிப்பானை...

சுற்றுலா மையங்களை மேம்படுத்த நடவடிக்கை: நாமக்கல்லில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

Image
''தமிழகத்தில் உள்ள, 1,000 சுற்றுலா தலங்களில், 295 சுற்றுலா மையங்களை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன,'' என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில், நன்கொடையாளர்கள் மூலம், 23 மல்டி பாரா மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கருவிகளை வழங்கினார். திருநங்கை காயத்ரிஸ்ரீக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக தற்காலிகமாக பணியாற்ற உத்தரவிட்டு, அதற்கான பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் கூறியதாவது. தமிழகத்தில் 18 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. எக்கோ டூரிசம், மெடிக்கல் டூரீசம், பீச் டூரிசம் உள்ளிட்ட வகைகளில், சுற்றுலாவை மேம்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள, 1,000 சுற்றுலா தலங்களில், 295 சுற்றுலா மையங்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.  கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, லேசர் ஒளி அமைப்பதற்கு உத்தரவ...

கொல்லிமலை அடிவாரத்துக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்

Image
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த, 3 வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.  இந்த மழையினால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, சின்னருவி உள்ளிட்ட பல்வேறு பகுதி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதே போல் கொல்லிமலையையொட்டிள்ள பகுதியான செம்மேடு, சோளக்காடு, மேட்டு விளாராம், பின்னம், வீரகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழை நீர், வனப்பகுதி வழியாக மலையில் இருந்து காற்றாற்று வெள்ளமாக மாறி கொல்லிமலை அடிவாரப்பகுதிகளான காரவள்ளி,பெரியசாமி கோவில், பாளையபாளையம் கோம்பை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி,குளங்களுக்கு தண்ணீர் வரும் வகையில் நீர் வழிப்பாதை உள்ளது.   இந்நிலையில் கடந்த வாரங்களில் இந்த மலைப்பகுதியையொட்டிள்ள பகுதிகளிலும் கன மழை பெய்ததால் வனத்தின் வழியாக மழை நீர் காற்றாற்று வெள்ளமாக மாறி தாழ்வான பகுதியான முத்துக்காப்பட்டி அருகே உள்ள பெரியசாமி கோவில் அடிவார பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு வர தொடங்கியுள்ளது.

நாமக்கல்லில் நாளை (03.06.2021) கொரோனா தடுப்பூசி முகாம் நகராட்சி ஆணையர் தகவல்

Image
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் பொதுமக்கள் தற்பொழுது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வருகிறார்கள். நாமக்கல் நகரப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள நாளை நாமக்கல் நகரில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து  நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது.  நாமக்கல் நகராட்சி கொரோனா வைரஸ் ( COVID - 19 ) நோய் தொற்று அதிகரித்து வருவதால் நகரப்பகுதிகளில் பொதுமக்களுக்கு கோவிசீல்டு தடுப்பூசி முதல் மற்றும் 2 தவணை கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்ட 1500 நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும்.  இதற்கான தடுப்பூசி முகாம் நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் உள்ள சக்திமயில் திருமணமண்டபத்தில் நாளை வியாழக்கிழமை (03.06.2021) காலை 10.00 மணி முதல் முகாம் நடைபெற உள்ளது . மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கப்படுகிறது இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Image
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்கள் இடியுடன் கூடிய கோடை மழை எதிர்பார்க்கப்படுகிறது.  கால்நடைகளை மரங்களுக்கு அடியில் அல்லது மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் உள்ள இடங்களுக்கு அருகில் அல்லது கம்பி வேலியின் அருகில் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை மழை பெய்யும் போது மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடைகளுக்க...

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 30 மருத்துவர்கள் நியமனம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் அரசு அனுமதியின் பேரில், தற்காலிக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானது.  இதன்படி, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைகளில் நேர்காணல் நடந்தது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலில், கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சை பணிகளுக்காக 30 மருத்துவர்கள், 22 செவிலியர்கள், 25 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் உடனே பணியில் சேர்வார்கள் என்று அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Image
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்  நாமக்கல் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். ஆகஸ்டு 27-ந் தேதி கடைசிநாள் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி வரை பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம...

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

Image
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், பெண்களுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   இந்த குழுவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர், ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகள் இல்லத்தை நடத்துபர்கள் என 7 பேர் அடங்குவர். இக்குழுவினர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோரை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுப்பர். எனவே, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற ...