கொல்லிமலை அடிவாரத்துக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த, 3 வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்த மழையினால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, சின்னருவி உள்ளிட்ட பல்வேறு பகுதி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதே போல் கொல்லிமலையையொட்டிள்ள பகுதியான செம்மேடு, சோளக்காடு, மேட்டு விளாராம், பின்னம், வீரகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழை நீர், வனப்பகுதி வழியாக மலையில் இருந்து காற்றாற்று வெள்ளமாக மாறி கொல்லிமலை அடிவாரப்பகுதிகளான காரவள்ளி,பெரியசாமி கோவில், பாளையபாளையம் கோம்பை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி,குளங்களுக்கு தண்ணீர் வரும் வகையில் நீர் வழிப்பாதை உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரங்களில் இந்த மலைப்பகுதியையொட்டிள்ள பகுதிகளிலும் கன மழை பெய்ததால் வனத்தின் வழியாக மழை நீர் காற்றாற்று வெள்ளமாக மாறி தாழ்வான பகுதியான முத்துக்காப்பட்டி அருகே உள்ள பெரியசாமி கோவில் அடிவார பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு வர தொடங்கியுள்ளது.
Comments
Post a Comment