கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் நோய் தடுப்பு பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் நகராட்சி பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.


நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி நாமக்கல் நகராட்சி ரமேஷ் தியேட்டர் அருகில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை ஆய்வு செய்து வருகின்றனர். 

இப்பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மருந்து, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கிடைப்பது குறித்து ஆய்வு செய்தார்.

இதுபோல் R.P.புதூர், E.B காலனி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்