நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை.
அடுத்த மூன்று நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் லேசானமேகமூட்டத்துடன், சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் திசை பெரும்பாலும் தென் மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு, 8 கி.மீ., என்றளவில் வீசும். காற்றின் ஈரப்பதம், 40.85 சதவீதமாக நிலவும். எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வில் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயர்ச்சி மற்றும் குடற்புண் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. எனவே பண்ணைகளில் பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதால் நீர் தெளிப்பானை உபயோகப்படுத்த வேண்டும்.
தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின் சி மற்றும் தாது உப்புகளை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment