நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.


அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்கள் இடியுடன் கூடிய கோடை மழை எதிர்பார்க்கப்படுகிறது.

 கால்நடைகளை மரங்களுக்கு அடியில் அல்லது மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் உள்ள இடங்களுக்கு அருகில் அல்லது கம்பி வேலியின் அருகில் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை மழை பெய்யும் போது மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.

கால்நடைகளுக்கான கொட்டகைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றுவது நல்லது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆழ் கூளம் முறையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு ரத்த கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரத்த கழிச்சல் நோய் ஏற்படாமல் தடுக்க ஆழ் கூளம் சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமலும் பராமரிக்க வேண்டும். மேலும், சுத்தமான குடிநீரை கோழிகளுக்கு கொடுக்க வேண்டும்.

கிருமி நாசினி
ரத்த கழிச்சல் நோயானது நோய் வாய்ப்பட்ட ஒரு கோழியில் இருந்து மற்ற கோழிகளுக்கு எளிதாக பரவக்கூடியது. அதனால் நோயுற்ற கோழிகளை மற்ற கோழிகளிடமிருந்து பிரித்து வைக்க வேண்டும்.

ரத்த கழிச்சல் வராமல் தடுக்க கொட்டகையை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் சுண்ணாம்பு தூள் கொண்டு ஆழ் கூளத்தின் ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் உறை முட்டையை செயளிலக்க செய்யலாம்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்