நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணி நிறுத்தம் 50 லட்சம் செங்கற்கள் தேக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், 50 லட்சம் செங்கற்கள் தேங்கியுள்ளன.
நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தினமும், 5 லட்சம் செங்கற்கள் தயார் செய்யப்பட்டு கோவை, ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த பகுதிகளில் தங்கி, செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் முழு ஊரடங்கு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால் கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய, 50 லட்சம் செங்கற்கள் தேங்கியுள்ளன.
செங்கல் தயாரிப்பதை பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இந்த பகுதியில் மட்டும், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலையிழந்து தவித்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளி மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த செங்கல் தற்போது, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Comments
Post a Comment