மக்களை தொடர்ந்து அலைக்கழிக்கும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு பணியாளர்கள்
தமிழக அரசின் குறைந்த விலையில் மக்கள் பயன்படும் வகையில் அம்மா சிமெண்ட் எனப்படும் சிமெண்ட் மூட்டைகள் வீடு பழுதுபார்த்தல் மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் பெற்று வீடு கட்டும் நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் நல்ல தரமான சிமென்ட் மூட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக முன்பாகவே பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்ய இருப்பவர்கள் அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்களிடம் சிமெண்ட் மூட்டைகளை பெறுவதற்கு அதிகமாக அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
அதாவது இரண்டாவது முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகு அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது அதாவது அரசு ஊழியர்கள் 30% பணியாற்றலாம் என அறிவித்தது இருப்பினும் கடந்த 2 மாதமாக அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்கள் பணிக்கு திரும்பாததால் மோகனூர் மற்றும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கை நம்பி கட்டிட வேலையை ஆரம்பித்துள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
தினமும் ஐந்து முதல் ஆறு நபர்கள் இந்த அம்மா சிமெண்ட் கிடங்கு வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வருபவர்களுக்கு பதில் கூறுவதற்குக் கூட அலுவலகத்தில் யாரும் இல்லை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்கள் தங்களது மொபைலை சுவிட்ச் ஆப் செய்துளளதால், ஏற்கனவே சிமெண்ட் மூட்டை பெறுவதற்காக பணம் கட்டியவர்கள் மற்றும் புதியதாக சிமெண்ட் மூட்டை பெறுவதற்காக பணம் கட்ட இருப்பவர்கள் அனைவரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் நடுத்தரவர்க்க மக்களின் ஒரே ஆறுதலான விஷயமாக அம்மா சிமெண்ட் மட்டுமே தற்போது வரை இருந்து வருகிறது.
இருப்பினும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்கள் இவ்வாறு பணியில் ஈடுபடுவதில் மிகவும் மெத்தனமாக இருப்பதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இது குறித்து அங்கு மூட்டை தூக்கும் கூலியாட்களை விசாரிக்கும் பொழுது அதிகாரிகள் எப்போது வருவார்கள் என்று எங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இதில் ஏற்கனவே பதிவு செய்த மக்களில் சிலர் தான் இந்த அம்மா சிமெண்ட் மூட்டை பெறுவதற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் காத்திருப்பதாகவும் ஊரடங்கு முன்னதாகவே தான் பணத்தை கட்டி உள்ளதாகவும் கூறினார் மேலும் மற்றொருவர் ஏற்கனவே 50 மூட்டை பெற்றுள்ளேன் நான் எனது இரண்டாவது தவணையைப் பெறுவதற்காக நான் இரண்டு மாதத்திற்கு மேலாக காத்திருக்கிறேன் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
50 சதவீத பணியாளர்களைக் கொண்டு அரசு அலுவலகம் இயங்கலாம் என அரசு அறிவித்திருந்த நிலையில் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என அங்கு கூடிய மக்கள் தெரிவித்தனர்.
அரசு தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி ஒரு மூட்டை அம்மா சிமெண்ட் விலை 216 ரூபாய் ஆகும். மற்றும் இதனை வாகனத்தில் ஏற்றி விட ஏற்றுக் கூலி மூட்டைக்கு 10 ரூபாய் வீதம் மொத்தம் 50 மூட்டைக்கு 500 ரூபாய் தனியாக பெற்றுக்கொள்வது இதுவரை வழக்கமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக மூட்டை எடுத்த நபரிடம் விசாரித்த பொழுது தற்போது புதியதாக மேலும் கூடுதலாக 500 ரூபாய் தரவேண்டும் எனவும் இந்த தொகை பதிவு செய்யப்படும் கம்ப்யூட்டர் மற்றும் இதர பொருட்களின் பராமரிப்பு செலவுக்காக மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்கள் கேட்பதாக சிமெண்ட் மூட்டை எடுத்தவர்கள் குற்றம்சட்டி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதுபோன்ற எந்த கட்டணமும் மக்களிடம் வசூலிக்க சொல்லி உத்தரவிடவில்லை. இதனால் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கில் அரங்கேறி வரும் முறைகேடுகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முறை படுத்தும்படி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment