நாமக்கல்லில் நாளை (03.06.2021) கொரோனா தடுப்பூசி முகாம் நகராட்சி ஆணையர் தகவல்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்
பொதுமக்கள் தற்பொழுது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வருகிறார்கள்.


நாமக்கல் நகரப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள நாளை நாமக்கல் நகரில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து 
நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது. 

நாமக்கல் நகராட்சி கொரோனா வைரஸ் ( COVID - 19 ) நோய் தொற்று அதிகரித்து வருவதால் நகரப்பகுதிகளில் பொதுமக்களுக்கு கோவிசீல்டு தடுப்பூசி முதல் மற்றும் 2 தவணை கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்ட 1500 நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும். 

இதற்கான தடுப்பூசி முகாம் நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் உள்ள சக்திமயில் திருமணமண்டபத்தில்
நாளை வியாழக்கிழமை (03.06.2021) காலை 10.00 மணி முதல் முகாம் நடைபெற உள்ளது .


மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கப்படுகிறது இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Comments