நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்கள் இடியுடன் கூடிய கோடை மழை எதிர்பார்க்கப்படுகிறது. கால்நடைகளை மரங்களுக்கு அடியில் அல்லது மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் உள்ள இடங்களுக்கு அருகில் அல்லது கம்பி வேலியின் அருகில் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை மழை பெய்யும் போது மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடைகளுக்க...