நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு

நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு


பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வெளியீடு

தமிழ்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் தடையில்லாமல் பாதுகாப்புடன் வீடு தேடி வந்துசேர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இப்பொருட்கள் தடையின்றியும், சரியான விலையிலும் கிடைக்கிறதா என்பதை அறிய தமிழ்நாடு முழுக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தந்து வருகின்றனர். 

பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் வணிகர் சங்க பிரதிநிதிகளான 
ஜெயகுமார் வெள்ளையன் 
 98437 98438

பொன்.வீரக்குமார் -94431 59359

N.P.கிருஷ்ணன் -91590 25307

சேந்தை கோபாலகிருஷ்ணன் 99423 13113

S. மனோகரன் 
96886 66677 (காய்கறி மட்டும்) 
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் பொதுமக்களை சென்றடைவதில் உண்டாகும் பிரச்சனைகள் மற்றும் பொருட்களின் விற்பனை விலையில் உண்டாகும் புகார்கள் பற்றி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு குழுவினரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

மேலும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள நேரத்திற்கு மேல் வணிகம் செய்வோர் மற்றும் டோர் டெலிவரி செய்யாமல் பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக கடைகளில் விற்பனை செய்வோர் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கலாம்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரோடு வணிகர்களுக்கு நல்லுறவு ஏற்படவும், கொரோனா தொற்று பரவும் தீவிரத்தை குறைத்திடும் வகையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்திடவும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி நியாயமான விலையில் கிடைத்திடவும் இக்குழு முனைப்புடன் செயல்படும்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்