நாமக்கல் நகர காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் நாமக்கல் கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் சார்பில் காவலர் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு
நாமக்கல் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள 270 காவலர் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில், நாமக்கல் நகர காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் நாமக்கல் கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் நிறுவனத்தினர் இணைந்து இலவச காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுஜாதா, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார், துணை கண்காணிப்பாளர் காந்தி, நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் காவலர்களுக்கு காய்கறி தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட செயலாளர் வீரக்குமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், காய்கறி வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜசேகர், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment