Posts

மக்களை தொடர்ந்து அலைக்கழிக்கும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு பணியாளர்கள்

Image
தமிழக அரசின் குறைந்த விலையில் மக்கள் பயன்படும் வகையில் அம்மா சிமெண்ட் எனப்படும் சிமெண்ட் மூட்டைகள் வீடு பழுதுபார்த்தல் மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் பெற்று வீடு கட்டும் நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் நல்ல தரமான சிமென்ட் மூட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக முன்பாகவே பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்ய இருப்பவர்கள் அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்களிடம் சிமெண்ட் மூட்டைகளை பெறுவதற்கு அதிகமாக அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். அதாவது இரண்டாவது முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகு அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது அதாவது அரசு ஊழியர்கள் 30% பணியாற்றலாம் என அறிவித்தது இருப்பினும் கடந்த 2 மாதமாக அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்கள் பணிக்கு திரும்பாததால் மோகனூர் மற்றும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கை நம்பி கட்டிட வேலையை ஆரம்பித்துள்ள மக்கள் தவித்து வருகின்றனர். தினமும் ஐந்து முதல் ஆறு நபர்கள் இந்த அம்மா சிமெண்ட் கிடங்கு வந்த வண்ணம் உள்ளனர். அ...

கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் நோய் தடுப்பு பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Image
நாமக்கல் நகராட்சி பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி நாமக்கல் நகராட்சி ரமேஷ் தியேட்டர் அருகில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை ஆய்வு செய்து வருகின்றனர்.  இப்பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மருந்து, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கிடைப்பது குறித்து ஆய்வு செய்தார். இதுபோல் R.P.புதூர், E.B காலனி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் ஆகியோர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணி நிறுத்தம் 50 லட்சம் செங்கற்கள் தேக்கம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், 50 லட்சம் செங்கற்கள் தேங்கியுள்ளன. நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தினமும், 5 லட்சம் செங்கற்கள் தயார் செய்யப்பட்டு கோவை, ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.   திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த பகுதிகளில் தங்கி, செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்நிலையில், கடந்த மாதம் முதல் முழு ஊரடங்கு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.  இதனால் கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய, 50 லட்சம் செங்கற்கள் தேங்கியுள்ளன.  செங்கல் தயாரிப்பதை பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இந்த பகுதியில் மட்டும், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலையிழந்து தவித்து வருகின்றன.  இந்நிலையில், க...

நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
நாமக்கல் மாவட்டத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை. அடுத்த மூன்று நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் லேசானமேகமூட்டத்துடன், சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.  காற்றின் திசை பெரும்பாலும் தென் மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு, 8 கி.மீ., என்றளவில் வீசும். காற்றின் ஈரப்பதம், 40.85 சதவீதமாக நிலவும். எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வில் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயர்ச்சி மற்றும் குடற்புண் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. எனவே பண்ணைகளில் பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதால் நீர் தெளிப்பானை...

சுற்றுலா மையங்களை மேம்படுத்த நடவடிக்கை: நாமக்கல்லில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

Image
''தமிழகத்தில் உள்ள, 1,000 சுற்றுலா தலங்களில், 295 சுற்றுலா மையங்களை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன,'' என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில், நன்கொடையாளர்கள் மூலம், 23 மல்டி பாரா மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கருவிகளை வழங்கினார். திருநங்கை காயத்ரிஸ்ரீக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக தற்காலிகமாக பணியாற்ற உத்தரவிட்டு, அதற்கான பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் கூறியதாவது. தமிழகத்தில் 18 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. எக்கோ டூரிசம், மெடிக்கல் டூரீசம், பீச் டூரிசம் உள்ளிட்ட வகைகளில், சுற்றுலாவை மேம்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள, 1,000 சுற்றுலா தலங்களில், 295 சுற்றுலா மையங்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.  கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, லேசர் ஒளி அமைப்பதற்கு உத்தரவ...

கொல்லிமலை அடிவாரத்துக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்

Image
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த, 3 வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.  இந்த மழையினால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, சின்னருவி உள்ளிட்ட பல்வேறு பகுதி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதே போல் கொல்லிமலையையொட்டிள்ள பகுதியான செம்மேடு, சோளக்காடு, மேட்டு விளாராம், பின்னம், வீரகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழை நீர், வனப்பகுதி வழியாக மலையில் இருந்து காற்றாற்று வெள்ளமாக மாறி கொல்லிமலை அடிவாரப்பகுதிகளான காரவள்ளி,பெரியசாமி கோவில், பாளையபாளையம் கோம்பை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி,குளங்களுக்கு தண்ணீர் வரும் வகையில் நீர் வழிப்பாதை உள்ளது.   இந்நிலையில் கடந்த வாரங்களில் இந்த மலைப்பகுதியையொட்டிள்ள பகுதிகளிலும் கன மழை பெய்ததால் வனத்தின் வழியாக மழை நீர் காற்றாற்று வெள்ளமாக மாறி தாழ்வான பகுதியான முத்துக்காப்பட்டி அருகே உள்ள பெரியசாமி கோவில் அடிவார பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு வர தொடங்கியுள்ளது.

நாமக்கல்லில் நாளை (03.06.2021) கொரோனா தடுப்பூசி முகாம் நகராட்சி ஆணையர் தகவல்

Image
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் பொதுமக்கள் தற்பொழுது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வருகிறார்கள். நாமக்கல் நகரப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள நாளை நாமக்கல் நகரில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து  நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது.  நாமக்கல் நகராட்சி கொரோனா வைரஸ் ( COVID - 19 ) நோய் தொற்று அதிகரித்து வருவதால் நகரப்பகுதிகளில் பொதுமக்களுக்கு கோவிசீல்டு தடுப்பூசி முதல் மற்றும் 2 தவணை கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்ட 1500 நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும்.  இதற்கான தடுப்பூசி முகாம் நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் உள்ள சக்திமயில் திருமணமண்டபத்தில் நாளை வியாழக்கிழமை (03.06.2021) காலை 10.00 மணி முதல் முகாம் நடைபெற உள்ளது . மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கப்படுகிறது இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Image
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்கள் இடியுடன் கூடிய கோடை மழை எதிர்பார்க்கப்படுகிறது.  கால்நடைகளை மரங்களுக்கு அடியில் அல்லது மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் உள்ள இடங்களுக்கு அருகில் அல்லது கம்பி வேலியின் அருகில் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை மழை பெய்யும் போது மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடைகளுக்க...

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 30 மருத்துவர்கள் நியமனம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் அரசு அனுமதியின் பேரில், தற்காலிக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானது.  இதன்படி, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைகளில் நேர்காணல் நடந்தது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலில், கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சை பணிகளுக்காக 30 மருத்துவர்கள், 22 செவிலியர்கள், 25 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் உடனே பணியில் சேர்வார்கள் என்று அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Image
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்  நாமக்கல் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். ஆகஸ்டு 27-ந் தேதி கடைசிநாள் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி வரை பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம...

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

Image
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், பெண்களுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   இந்த குழுவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர், ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகள் இல்லத்தை நடத்துபர்கள் என 7 பேர் அடங்குவர். இக்குழுவினர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோரை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுப்பர். எனவே, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற ...

நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு

Image
நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வெளியீடு தமிழ்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் தடையில்லாமல் பாதுகாப்புடன் வீடு தேடி வந்துசேர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இப்பொருட்கள் தடையின்றியும், சரியான விலையிலும் கிடைக்கிறதா என்பதை அறிய தமிழ்நாடு முழுக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தந்து வருகின்றனர்.  பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் வணிகர் சங்க பிரதிநிதிகளான  ஜெயகுமார் வெள்ளையன்   98437 98438 பொன்.வீரக்குமார் -94431 59359 N.P.கிருஷ்ணன் -91590 25307 சேந்தை க...

நாமக்கல் நகர காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் நாமக்கல் கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் சார்பில் காவலர் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு

Image
நாமக்கல் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள 270 காவலர் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில், நாமக்கல் நகர காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் நாமக்கல் கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் நிறுவனத்தினர் இணைந்து இலவச காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுஜாதா, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார், துணை கண்காணிப்பாளர் காந்தி, நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் காவலர்களுக்கு காய்கறி தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட செயலாளர் வீரக்குமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், காய்கறி வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜசேகர், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிப்பு

Image
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், 1,956 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே வாகன சோதனையின் போது ஊரடங்கை மீறும் நபர்கள் மற்றும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வெளியே சுற்றும் நபர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, அதாவது கடந்த 6 நாட்களில் முககவசம் அணியாத 4,115 பேர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இ...

ரெயில்-விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்

Image
நாளை முதல் அமுலுக்கு வருகிறது ஜூன் 7-ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளநிலையில், ரயில், விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதற்கட்ட தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதில் விமான ரெயில் நிலையங்களுக்கு செல்வோர் இபதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.  வீடுகளில் இருந்து ரெயில் விமான நிலையம் செல்வோரும், அங்கிருந்து மறுபடியும் வீடுகளுக்கு செல்வோரும் கட்டாயம் இ பதிவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ பதிவு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நாளை 1.06.2021 (செவ்வாய்க்கிழமை) முதல் அமலாக இருக்கும் 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்திலும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலான முழு ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுக...

காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் நேரம் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு

Image
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கப் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாதாவது காய்கறி விற்பனை மற்றும் மளிகை பொருட்கள் டோர் டெலிவரியை காலை 6 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அறிவித்துள்ளத நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் முறையான அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே இந்த சேவையை செய்ய இயலும். அனுமதி பெறாத வாகனங்கள் டோர் டெலிவரி செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. எக்காரணம் கொண்டும் கடைகளில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொத்த வியாபாரம் செய்வோர் சில்லரை வணிகர்களிடம் ஆர்டர் பெற்று அதனை வாகனம் மூலமாக நேரடியாக அவர்களின் கடைகளுக்கு டெலிவரி செய்ய வேண்டும். டோர் டெலிவரியை தவிர, எக்காரணம் கொண்டும் கடைகளில் பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கோ சில்லரை வணிகர்களுக்...

முழு ஊரடங்கால் பரமத்தி வேலூர் பகுதியில் வாழை மரத்தில் பழுத்து வீணாகும் பழங்கள் அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

Image
முழு ஊரடங்கால் பரமத்தி வேலூர், மோகனூர் சுற்றுவட்டாரத்தில் பலஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைப்பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாழை மரத்தில் பழங்கள் பழுத்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுா், மோகனுார் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. இதை மையப்படுத்தி காவிரிக் கரையோரத்தில் பல விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பரமத்தி வேலுார், பாண்டமங்கலம், பொத்தனூர், வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்துார் உள்ளிட்ட பகுதியில் வாழை சாகுபடி பிரதானமாக உள்ளது. பூவன், ரஸ்தாளி, பச்சை நாடான் உள்ளிட்ட ரக வாழை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் வாழைப் பழங்கள் பரமத்தி வேலுார் வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, விவசாய தோட்டங்களுக்கு நேரடியாக வாழையை கொ...

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 100 படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் உத்தரவு

Image
நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 100 படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது உத்தரவிட்டு உள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் மாநில கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும், நோயாளிகளின் தொலைபேசி அழைப்பின் பேரில் மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டார். மேலும் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளின் உடல் நிலை குறித்து சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு விசாரணை செய்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையும் டாக்டர் தாரேஸ் அகமது பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் நோய...

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2.13 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது; அமைச்சர் மதிவேந்தன் தகவல்

Image
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணிகள், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வழங்கும் பணிகள், பால் மற்றும் குடிநீர் வினியோக பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது.நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 971 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய விருப்பமுள்ளவர்கள், அதற்கு முறையாக நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.  காய்கறி விற்பனை செய்யும் நபர்களுக்கு தினந்தோறும் உடல் வெப்பநிலை பர...

நாமக்கல் எலெக்டிரிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

Image
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான நாமக்கல் எலெக்ட்ரிக்கல் வியாபாரிகள் சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டன. நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார் முன்னிலையில், எலெக்ட்ரிகல் சங்க தலைவர் சங்கர் தலைமையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் மல்டி ஆக்சிஜன் மீட்டர், என்95 மற்றும் சர்ஜிகல் முககவசங்கள், ஆக்சிஜன் முககவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட ரூபாய் 1,60,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், மாவட்ட செயலாளர் வீரக்குமார், எலெக்ட்ரிக்கல் சங்க உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.