நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2.13 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது; அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். 


இந்த கூட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணிகள், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வழங்கும் பணிகள், பால் மற்றும் குடிநீர் வினியோக பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது.நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 971 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய விருப்பமுள்ளவர்கள், அதற்கு முறையாக நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். 

காய்கறி விற்பனை செய்யும் நபர்களுக்கு தினந்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உட்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வெளி இடங்களுக்கு செல்லாமல் இருக்க உள்ளாட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நோய் தொற்று பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அசோக் குமார், திட்ட இயக்குனர் மலர்விழி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சித்ரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்