நாமக்கல் எலெக்டிரிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான நாமக்கல் எலெக்ட்ரிக்கல் வியாபாரிகள் சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டன.
நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார் முன்னிலையில், எலெக்ட்ரிகல் சங்க தலைவர் சங்கர் தலைமையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் மல்டி ஆக்சிஜன் மீட்டர், என்95 மற்றும் சர்ஜிகல் முககவசங்கள், ஆக்சிஜன் முககவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட ரூபாய் 1,60,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், மாவட்ட செயலாளர் வீரக்குமார், எலெக்ட்ரிக்கல் சங்க உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment