காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் நேரம் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கப் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாதாவது
காய்கறி விற்பனை மற்றும் மளிகை பொருட்கள் டோர் டெலிவரியை காலை 6 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அறிவித்துள்ளத
நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் முறையான அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே இந்த சேவையை செய்ய இயலும். அனுமதி பெறாத வாகனங்கள் டோர் டெலிவரி செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
எக்காரணம் கொண்டும் கடைகளில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொத்த வியாபாரம் செய்வோர் சில்லரை வணிகர்களிடம் ஆர்டர் பெற்று அதனை வாகனம் மூலமாக நேரடியாக அவர்களின் கடைகளுக்கு டெலிவரி செய்ய வேண்டும்.
டோர் டெலிவரியை தவிர, எக்காரணம் கொண்டும் கடைகளில் பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கோ சில்லரை வணிகர்களுக்கோ விற்பனை செய்யக்கூடாது.
பொதுமக்கள் நலன் கருதி, அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பணியாளர்கள் முறையாக முகக்கவசம் அணிந்தும், கையுறைகள் அணிந்தும், டெலிவரியின் போது சமூக இடைவெளி பின்பற்றியும் பாதுகாப்புடன் நடந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வணிக பெருமக்கள் இந்த நேர கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment