Posts

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Image
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் இந்த மாதத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதாவது நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோணா நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 92 ஆக உயர்ந்துள்ளது. இது ஒருபுறமிருக்க இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஆக்டிவ் கேஸ் 12ஆக உயர்ந்துள்ளது இவர்கள் அனைவரும் தற்போது கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தமிழக அரசிடம் கோரிக்கை

Image
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உணவு பொட்டலங்கான தடைக்கான அரசாணை காலக்கெடு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில். தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் இருப்பினும் தற்போது உள்ள கொரோனோ சூழ்நிலை காரணமாக வணிகர்கள் ஏற்கனவே பலர் நஷ்டமடைந்துள்ளனர். இதனால் இந்த காலகட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் இது வணிகர்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படும் என்பதால் இதற்கான அரசானை காலகட்டத்தை தள்ளி வைக்குமாறு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரனோக்கு முன்பு இருந்த நிலையை அடைந்த நாமக்கல் நகராட்சி

Image
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மக்கள் அலட்சியப்படுத்தும் விதமாக முக கவசம் அணிவது சமூக இடைவெளி கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது போன்ற வற்றில் அலட்சியப் போக்காக தற்போது இருந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தமிழக அரசு அறிவிப்பின்படி 50% பணியாளர்களைக் கொண்டு மட்டுமே நிறுவனங்களை இயக்க வேண்டும் என்ற தளர்வினை மதிக்காமல் பல தனியார் நிறுவனங்கள் நாமக்கல்லில் 100% வேலையாட்களுடன் தற்போது தங்களது நிறுவனத்தை இயக்கி வருகின்றனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித் துறையினர்

Image
நாமக்கல் நகராட்சியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணி துறையினர். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு காரணமாக 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நகராட்சி பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் மக்களின் கூட்டம் குறைவாகவே இருப்பதால் இந்த சூழ்நிலையில் பயன்படுத்தி நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறையினர் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்டமாக இந்த நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பழுதுபார்க்கும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது

Image
நாமக்கல் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரை நாமக்கல் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது நமக்கள் பேருந்து நிலையம் அருகே காரில் திருச்சி சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து திருநங்கைகள் இருவர் வந்த காரில் பயணம் செய்த ரகுராம் என்பவரிடம் ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரகுராம் நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இவர் அளித்த புகாரின் பெயரில் திருநங்கைகளாக அர்ச்சனா(27) மற்றும் ரேகா(26) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தொற்றில் இருந்து இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்

Image
நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரண்டு நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 90 ஆக அதிகரித்தது. இந்நிலையில் ஏற்கனவே 77 நபர்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 11 நபர்களுக்கு கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து இன்று அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Image
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் இந்த மாதத்தில் நான்கு நாட்களாகவே தொடர்ந்து ஒன்று அல்லது இருவருக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோணா நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 90 ஆக உயர்ந்துள்ளது. இது ஒருபுறமிருக்க இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஆக்டிவ் கேஸ் 12ஆக உயர்ந்துள்ளது இவர்கள் அனைவரும் தற்போது கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.