நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தமிழக அரசிடம் கோரிக்கை
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உணவு பொட்டலங்கான தடைக்கான அரசாணை காலக்கெடு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில்.
தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் இருப்பினும் தற்போது உள்ள கொரோனோ சூழ்நிலை காரணமாக வணிகர்கள் ஏற்கனவே பலர் நஷ்டமடைந்துள்ளனர்.
இதனால் இந்த காலகட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் இது வணிகர்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படும் என்பதால் இதற்கான அரசானை காலகட்டத்தை தள்ளி வைக்குமாறு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Comments
Post a Comment