நாமக்கல் மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் இந்த மாதத்தில் நான்கு நாட்களாகவே தொடர்ந்து ஒன்று அல்லது இருவருக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதாவது நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோணா நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 90 ஆக உயர்ந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஆக்டிவ் கேஸ் 12ஆக உயர்ந்துள்ளது இவர்கள் அனைவரும் தற்போது கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Post a Comment