Posts

நேற்று திருச்செங்கோடு பகுதியில் பெய்த கன மழையில் அடித்துச் செல்லப்பட்ட முருகேசன் என்பவர் இன்று சடலமாக மீட்பு

Image
திருச்செங்கோட்டில் நேற்று (20.07.2020) பெய்த கனமழை காரணமாக தினசரி காய்கறி சந்தை அருகே மழையில் இருசக்கர வாகனத்தில் வந்த முருகேசன் என்பவர் சாக்கடையில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்து இழுத்துச் செல்லப்பட்டார்.   அவரது உடல் இன்று காலை அம்மன்குளத்தில் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் நகராட்சி ஊழியர்கள் இணைந்து பரிசலில் சென்று உடலை மீட்டு உள்ளனர் இவர் திருச்செங்கோடு பகுதி ஒக்கிலிபட்டி கிராமம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை கேள்விப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன்.சரஸ்வதி அவர்கள் நேரில்  சென்று பார்வையிட்டு, அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் சார்பில் அவரது குடும்பத்திற்கு நிவாரணம்  கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர்

Image
நாமக்கல் மாவட்டம் மேற்கு திமுக கழக மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இந்த கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் தமிழக அரசு மக்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை தராமல் தொடர்ந்து மின் கட்டணத்தை செலுத்தும் படி அறிவுருத்தி வருவதை கண்டித்து இன்று பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் தொண்டர்களுடன் கருப்புக்கொடி மற்றும் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார். மகாராஷ்டிரா டெல்லி மற்றும் பல மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு இந்த கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் மின் கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு தொடர்ந்து மக்களை மின் கட்டணத்தை செலுத்தும் படி அறிவுறுத்தி வருவதால் மின்கட்டணத்தில் சலுகை கொடு என்று முழக்கமிட்டு இன்று சமூக இடைவெளியுடன் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்.

வளையப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை மின்தடை

Image
நாளை வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 21.07.2020,  காலை 9.00 மணி மேல் கிழ் கண்ட மோகனூர் உட்கோட்ட பிரிவு அலுவலக பகிர்மானங்களுக்கு மின் தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். நகர் மோகனூர் பிரிவு: 010-சங்கரம்பாளையம், 017-ஒருவந்தூர் 015-ஒருவந்தூர் புதூர் புறநகர் மோகனூர் பிரிவு : 001-நத்தமேடு 002-அரூர் 003-மல்லம்பாளையம் 004-ஆண்டாபுரம் 005-ஆலம்பட்டி 006-சுக்காம்பட்டி 007-பரளி 010-சுக்காம்பட்டி REC 011-செவந்தாம்பாளையம் 012-அரசநத்தம் 018-கிடாரம் 019-சின்னதம்பிபாளையம் அணியாபுரம் பிரிவு : 014-லத்துவாடி 015-ஈச்சவாரி 017-தொட்டிபட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என செயற்மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அவர்கள் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Image
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் பகுதிகளில் குறிப்பாக குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம், சோழசிராமணி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன.  இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று நாமக்கல் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும்,  மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.  ஒரே இடத்தில் அதிக  அளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி நாளை (20.07.2020) ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம்,...

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

Image
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாமக்கல்லில் மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 305யை எட்டியுள்ளது ஆக்டிவ் 149 ஆகவும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 155 ஆகவும் தற்பொழுது உள்ளது. இந்நிலையில் இன்று ஆறுதல் தரும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 நபர்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சற்று பாதுகாப்பாக இருக்கும்படி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் கஞ்சா விற்ற இருவர் கைது

Image
நாமக்கல் பேருந்து நிலையத்தில் ரகசியமான முறையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று இருவர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் பேருந்து நிலையத்தில் இரகசியமான முறையில் கஞ்சா விற்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு சக்தி கணேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள மாரி கங்காணி என்ற பகுதியில் ரகசியமாக முறையில் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது புவனேஸ்வரி என்ற பெண்ணும் கார்த்திக் மாதவன் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய காவல் கண்காணிப்பாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்எல்ஏ

Image
நாமக்கல் மாவட்டத்திற்கு கடந்த வாரம் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்ற சக்தி கணேஷ் அவர்களை இன்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன் சரஸ்வதி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தை பற்றி பல்வேறு திட்டங்களை பற்றி ஆலோசித்தனர். மேலும் புதிய காவல் கண்காணிப்பாளர் செயல்படுத்திய ஹலோ சீனியர் மற்றும் லேடிஸ் பஸ்ட் ஆகிய இரண்டு திட்டத்தை தான் வரவேற்பதாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மேலும் இந்த இரண்டு திட்டங்களும் மக்களுக்கு சரியான முறையில் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் உதவும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த திரு அருளாரசு  அவர்கள் தற்போது கோவை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் தற்போது பதவியில் உள்ள நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்கள் முன்பு ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.