கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர்
நாமக்கல் மாவட்டம் மேற்கு திமுக கழக மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்.
இந்த கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் தமிழக அரசு மக்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை தராமல் தொடர்ந்து மின் கட்டணத்தை செலுத்தும் படி அறிவுருத்தி வருவதை கண்டித்து இன்று பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் தொண்டர்களுடன் கருப்புக்கொடி மற்றும் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார்.
மகாராஷ்டிரா டெல்லி மற்றும் பல மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு இந்த கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் மின் கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு தொடர்ந்து மக்களை மின் கட்டணத்தை செலுத்தும் படி அறிவுறுத்தி வருவதால் மின்கட்டணத்தில் சலுகை கொடு என்று முழக்கமிட்டு இன்று சமூக இடைவெளியுடன் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்.
Comments
Post a Comment