நேற்று திருச்செங்கோடு பகுதியில் பெய்த கன மழையில் அடித்துச் செல்லப்பட்ட முருகேசன் என்பவர் இன்று சடலமாக மீட்பு
திருச்செங்கோட்டில் நேற்று (20.07.2020) பெய்த கனமழை காரணமாக தினசரி காய்கறி சந்தை அருகே மழையில் இருசக்கர வாகனத்தில் வந்த முருகேசன் என்பவர் சாக்கடையில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்து இழுத்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல் இன்று காலை அம்மன்குளத்தில் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் நகராட்சி ஊழியர்கள் இணைந்து பரிசலில் சென்று உடலை மீட்டு உள்ளனர் இவர் திருச்செங்கோடு பகுதி ஒக்கிலிபட்டி கிராமம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை கேள்விப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன்.சரஸ்வதி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் சார்பில் அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
Comments
Post a Comment