புதிய காவல் கண்காணிப்பாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்எல்ஏ
நாமக்கல் மாவட்டத்திற்கு கடந்த வாரம் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்ற சக்தி கணேஷ் அவர்களை இன்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன் சரஸ்வதி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தை பற்றி பல்வேறு திட்டங்களை பற்றி ஆலோசித்தனர். மேலும் புதிய காவல் கண்காணிப்பாளர் செயல்படுத்திய ஹலோ சீனியர் மற்றும் லேடிஸ் பஸ்ட் ஆகிய இரண்டு திட்டத்தை தான் வரவேற்பதாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும் இந்த இரண்டு திட்டங்களும் மக்களுக்கு சரியான முறையில் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த திரு அருளாரசு அவர்கள் தற்போது கோவை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் தற்போது பதவியில் உள்ள நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்கள் முன்பு ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment