நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களின் விபரம்
வரதராஜ பெருமாள் கோவில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தையில் இருந்து பிரிந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும், சேந்தமங்கலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது அருள்மிகு நைனா மலை வரதராஜப் பெருமாள் கோவில். இது நாமக்கல்லில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது! புரட்டாசி விரதத்துக்கு பெயர்பெற்ற கோவில் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து சனிக்கிழமை மலையேறி பெருமாளை தரிசித்து வீட்டிற்கு சென்று காய்கறி படையல் செய்து வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்ற பட்டு வருகிறது. நைனாமலை நாமக்கல்லில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதிக்கு அருகில் உள்ள காளப்ப நாயக்கன் பட்டிக்கு அருகில் உள்ள செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் இப்பகுதியில் புகழ் பெற்றவர் . நாமக்கல் மாவட்டத்தில் வேற்று மொழி பேசுபவர்கள் வாழ்வதாலும், பல மண்ணர்கள் இப்பகுதியை முன்பு ஆண்டு வந்ததாலும், நைனா என்றால் தந்தை என்று பொருள் கடவுளை தந்தை என்று கூறும் வழக்கம் இருப்பதால் இம்மலை...