திருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் பலி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த பச்சியாயி தெருவைச் சேர்ந்த சிறுவன் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
திருச்செங்கோடு பகுதி அடுத்த பச்சியாயி தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ரத்திஸ் 11 வயது நேற்று முழு ஊரடங்கையடுத்து தனது சக நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த விளையாட்டின் போது அவர் அருகில் இருந்த கம்பத்தை தொட்டு விளையாட முயன்றபோது அருகில் இருந்த ஒயரில் கைகள் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Comments
Post a Comment