நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்களே Bio Diesel பற்றிய ஒரு எளிய புரிதல்

பயோடீசல் லிட்டருக்கு 10 ரூவா கம்மி. ஆகுற மீதிக்கு 79 ரூவா போட்டு டீசல் அடிச்சா என்னத்துக்கு ஆவுறது. இது ஒரு Group


பயோ டீசல் பயோடீசல் ன்னு அடிச்சி பிஸ்டன் ஹெட்டுல இருந்து நாசில் பம்பு வரைக்கும் வேலை வச்சுடும். மொத்தமா அம்பதாயிரம் ஒரு லட்சம்னனு செலவு பண்ணுறதுக்கு பத்து ரூவா அதிகமா குடுத்து டீசலே அடிச்சிக்கலாம் இது இன்னொரு group

சரி நம்ம ஊர்ல நடக்குற பயோ டீசல் பஞ்சாயத்த பாக்குறதுக்கு முன்ன இந்த பயோ டீசல் ன்னா என்ன ன்னு பாப்போம். 




ஆதி மனிதன் வேட்டை சமூகமாக இருந்த காலத்துல நெருப்பை கண்டுபிடிச்சி வேட்டையாடுன விலங்குகள தீயில சுட்டு சாப்பிட ஆரம்பிச்சான். அது தான் நவீன அறிவியலோட தொடக்கமா கருதப்படுது. காலம் போகப்போக மனிதனோட வாழ்வியல் தேவைகள் அதிகரிச்சுது. அதன் பயனா கன்டுபிடிக்கப்பட்டது தான் சக்கரம். காலச்சக்கரம் சுழல சுழல வேட்டையாடியவன் வேளாண்மை செய்ய ஆரம்பிச்சான். அதுக்காக வேண்டி ஆற்றங்கரைகளை நோக்கி நகர ஆரம்பிச்சான். அப்படி நகரும்போது, தான் கண்டிபிடிச்ச சக்கரம் மூலம் வண்டிகளை செய்து உழவுக்காக பிடித்துவரப்பட்ட கால்நடைகளை வைத்து வண்டியிழுக்க வைத்தான். கால ஓட்டத்தில் கழுதைகளும் மாடுகளும் கரியில் ஓடும் நீராவி இயந்திரங்களால் சிறிது சாப விமோட்சனம் பெற்றன( இன்னைக்கும் அதுங்க வண்டியிழுக்கப் பயன்பட்டுட்டு தான் இருக்கு). ஆனா பாருங்க இந்த நீராவி எஞ்சினுங்க அவ்ளோ வேகமால்லாம் போகாது. அதனால நம்ம ஜெர்மன் நாட்டவரான கார்ல் பென்ஸ் (நம்ம மெர்சிடீஸ் பென்ஸ்ஸோட ஓனர் தாங்க) பெட்ரோலால ஓடக்கூடிய கார் என்ஜின வடிவமைக்குறாரு. Daimler கூட கூட்டு சேர்ந்து பல மாற்றங்கள அந்த எஞ்சினுக்கு தர்றாங்க. பல்லாயிரக்கணக்கான வருசத்துக்கு முன்ன செத்து மடிஞ்சி பூமிக்கடியில படிமத்தோட சுத்தகரிக்கப்பட்ட திரவம் தான் பெட்ரோல். ரடோல்ஃப் டீசல் ன்றவரு அப்போ தான் சீனுக்குள்ள வர்றாரு. டீசல் ன்ற புதிய திரவத்த வச்சி ஓடுற மாதிரியான ஒரு இஞ்சின வடிவமைக்கிறாரு. (அவரு கண்டுபிடிச்சதனால அந்த எஞ்சினுக்கு அவர் பேரையே வச்சிட்டாப்ள) பாத்திங்கன்னா டீசலோட கொதிநிலை பெட்ரோல விட கம்மி. ஆனா பெட்ரோல் எஞ்சினை காட்டிலும் டீசல் என்ஞின்கள் அதிக டார்க்கை வழங்கக்கூடியவை அதாவது அதிக இழுவை இருக்கும். இப்போ புரியுதா ஏன் அதிகம் பாரம் ஏத்துற லாரிகள்ல பெட்ரோலுக்கு பதிலா டீசல் எஞ்சின் பயன்படுத்துறோம்னனு. 


உலகலாவிய வர்த்தகப்போட்டி, மாஃபியா பிரச்சனைகளால பெட்ரோலிய பொருட்களோட விலை எப்போதுமே நிலையா இருந்ததில்ல. திரவத்தங்கம் ன்னு பெட்ரோலுக்கு செல்லப்பேரே இருக்கு. அந்தளவுக்கு அதி முக்கியமான பொருளா பெட்ரோலிய பொருட்கள் மாறுச்சு. 

ஆனா உலக பெட்ரோலிய உற்பத்தியில் 79.4% மத்திய கிழக்கு நாடுகளான வலைகுடா நாடுகளின் கூட்டமைப்பான OPEC அமைப்பு தான் முன்னிலை வகிக்கிது. இது 2018 நிலவரம். உலக நாடுகள் அனைத்தும் தங்களோட பெட்ரோலிய தேவைகளுக்கு இந்த OPEC கூட்டமைப்ப தான் நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை. போதாக்குறைக்கு நிலத்துக்கடியில் இருந்து கிடைக்கும் பெட்ரோலிய பொருட்களின் மூலமான க்ரூட் ஆயில் ஒரு புதுப்பிக்கத்த எரிபொருள் இல்லை. எப்போ வேணா தீந்து போலாம்.



இந்த சிக்கல்கள எல்லாம் மனசுல வச்சி உலக நாடுகள் எல்லாம் மாற்று எரிபொருள் தேடி அலைஞ்சாங்க. 1937லயே பயோடீசல் ன்ற பனங்கொட்டை எண்ணைய கண்டுபிடிச்சிட்டாங்க. அத அதுக்கடுத்த வருசமே பஸ்ஸுல ஊத்தி ஓட்டிருக்காங்க. இது தான் முதல் உயிரி எரிபொருள். அதாவது தாவர எண்ணை அல்லது விலங்குகளின் கொழுப்புகள பயன்படுத்தி தயாரிக்கப்படுற எரிபொருள். அது தான் நம்ம தமிழ்நாட்டுட இப்போ ஒரு கலக்கு கலக்கிட்ருக்க பயோ டீசல். 

5 % எத்தனால் 10% எத்தனால் என கலந்து அரசின் எண்ணை நிறுவனங்களே டீசல் தயாரிக்கிறாங்க. இதுதாங்க நம்ம பையன் பயோடீசலோட வரலாறு.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்