காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
காவிரிக் கரையோர பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாளுக்கு நாள் நீர் வாரத்தின் வருகை அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் காவிரி கரையோர மக்கள் இருந்து வருகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போன்று காவிரி ஆற்றில் நீர் படிப்படியாக அதிகரித்து இறுதியில் காவிரி கரையோரப் பகுதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வருடமும் அதைப் போன்றே நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
மேலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சேலம் மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments
Post a Comment