Posts

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

Image
பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்களின் தலைமையில் இன்று நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு இந்த செயற்குழு கூட்டத்தில் இனிவரும் காலங்களில் திமுக சார்பில் எடுக்கப்படும் ஆக்கப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் இன்று விவாதித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் தங்களது உறுப்பினர்களிடம் ஆங்காங்கே உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவலை தங்களது தொண்டர்களுக்கு எடுத்துரைத்தார்.

நாமக்கல் கோழிப் பண்ணைகளில் 28 கொத்தடிமைகள் மீட்பு

Image
நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான கோழிப்பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான பெரிய பண்ணைகளில் வடமாநிலத்தவர்கள் அங்கேயே தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல்லை அடுத்த அணியாபுரம், எஸ்.வாழவந்தி, லத்துவாடி ஆகிய இடங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில்15 முதல் 25 வயதுடைய சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 25 பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு பல மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் எம்.கோட்டைக் குமாருக்கு அவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து திங்கள் கிழமையன்று கோட்டாட்சியர் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பினர் சம்மந்தப்பட்ட கோழிப் பண்ணைகளுக்கு சென்று அங்கிருந்த 28 பேரையும் மீட்டு நாமக்கல் அழைத்து வந்தனர். நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உணவுக...

காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Image
காவிரிக் கரையோர பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் நீர் வாரத்தின் வருகை அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் காவிரி கரையோர மக்கள் இருந்து வருகின்றனர்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போன்று காவிரி ஆற்றில் நீர் படிப்படியாக அதிகரித்து இறுதியில் காவிரி கரையோரப் பகுதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த வருடமும் அதைப் போன்றே நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.  மேலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சேலம் மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

Image
நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் முன் இன்று நாமகிரிப்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை அடுத்த குச்சிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம்மா இவர் தனது சொந்த பிரச்சனை காரணமாக நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால்.  நேற்று முன்தினம் இவர் மண்ணெண்ணெய் கேனுடன் நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார் இதனை நல்லிபாளையம் காவலர்கள் தடுத்து தற்பொழுது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் பலி

Image
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த பச்சியாயி தெருவைச் சேர்ந்த சிறுவன் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழப்பு திருச்செங்கோடு பகுதி அடுத்த பச்சியாயி தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ரத்திஸ் 11 வயது நேற்று முழு ஊரடங்கையடுத்து தனது சக நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த விளையாட்டின் போது அவர் அருகில் இருந்த கம்பத்தை தொட்டு விளையாட முயன்றபோது அருகில் இருந்த ஒயரில் கைகள் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாமக்கல் எர்ணாபுரம் பகுதியில் புதிய தனிமைப்படுத்தும் பகுதியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

Image
நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிக வரும் காரணத்தினால் கொரனோ பரிசோதனையை அதிகமாக மேற்கொள்வதில் அரசு தற்பொழுது கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே வளையப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்படும் பகுதி அல்லாமல் மேலும் ஒரு பகுதியை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தற்பொழுது அமைத்து வருகிறது. வெளிமாவட்ட மற்றும் மாநிலங்கள் இருந்து வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகு தனிமையில் 15 முதல் 7நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது இவற்றை மேலும் விரிவுபடுத்த நாமக்கல் எர்ணாபுரம் பகுதியில் மேலும் ஒரு தனிமைப்படுத்தப்படும் பகுதியை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் பார்வையிட்டார். எர்னாபுரம் பகுதியில் உள்ள தனியார் கிடங்கு தற்பொழுது தனிமைப்படுத்தும் பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது இதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்துரையாடல்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கொரனோ நோய்த்தொற்று தற்பொழுது அதிகரித்து வருவதால் இவற்றை தடுப்பது குறித்து அதிகாரிகள் பலர் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாமக்கல் மாவட்டத்தில் எந்த பகுதிகளில் தற்போது அதிகமாக பரவி வருகிறது மற்றும் அவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கொரனோ நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பாடுபட்டு வரும் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் சரோஜா அவர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.