நாமக்கல் எர்ணாபுரம் பகுதியில் புதிய தனிமைப்படுத்தும் பகுதியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிக வரும் காரணத்தினால் கொரனோ பரிசோதனையை அதிகமாக மேற்கொள்வதில் அரசு தற்பொழுது கவனம் செலுத்தி வருகிறது.


இந்நிலையில் ஏற்கனவே வளையப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்படும் பகுதி அல்லாமல் மேலும் ஒரு பகுதியை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தற்பொழுது அமைத்து வருகிறது.



வெளிமாவட்ட மற்றும் மாநிலங்கள் இருந்து வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகு தனிமையில் 15 முதல் 7நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது இவற்றை மேலும் விரிவுபடுத்த நாமக்கல் எர்ணாபுரம் பகுதியில் மேலும் ஒரு தனிமைப்படுத்தப்படும் பகுதியை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் பார்வையிட்டார்.


எர்னாபுரம் பகுதியில் உள்ள தனியார் கிடங்கு தற்பொழுது தனிமைப்படுத்தும் பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது இதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்