கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்துரையாடல்
நாமக்கல் மாவட்டத்தில் கொரனோ நோய்த்தொற்று தற்பொழுது அதிகரித்து வருவதால் இவற்றை தடுப்பது குறித்து அதிகாரிகள் பலர் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தக் கூட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாமக்கல் மாவட்டத்தில் எந்த பகுதிகளில் தற்போது அதிகமாக பரவி வருகிறது மற்றும் அவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கொரனோ நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பாடுபட்டு வரும் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் சரோஜா அவர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
Comments
Post a Comment