Posts

Showing posts from August, 2020

திருச்செங்கோடு to பரமத்தி வேலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

Image
திருச்செங்கோடு to பரமத்தி வேலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மையில் தூரத்திற்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர். திருச்செங்கோடு நகரில் அதிகம் கனரக வாகனங்களின் போக்குவரத்து மிகுதியாக இருப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகின்றனர்.  ஒரு கனரக வாகனம் செல்லும் போது அதன் பின்னால் கிட்டத்தட்ட 500 மீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றனர் முன்னாள் சென்ற கனரக வாகனம் தன் இலக்கை  அடைந்த பின்னரே பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியும் நிலை உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அப்பகுதியில் சற்று அதிகமாக காணப்படுவதால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களும் ஒரே சமயத்தில் பயணிக்கும் போது இது போன்ற கடுமையான போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் தரப்பிலிருந்து ரிங் ரோடு மற்றும் சாலையை அகலப்படுத்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் ...

நாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

Image
நாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் முருகன் கோயில் பிரிவு அருகே காவல் உதவி ஆய்வாளா்  தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தனா். அதில் சுமாா் 20 கிலோ எடை கொண்ட 15 கஞ்சா மூட்டைகள் மொத்தம் 300 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும். இதனைத் தொடா்ந்து கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா் லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், பெத்தநாய்க்கன்பாளையம், ஏரிவளவைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் பழனி (55) என்பவரையும், அதே ஊரைச் சோ்ந்த டேனியல் மகன் ராஜ்குமாா் (34) என்பவரையும் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொடா் கஞ்சா சோதனையில் சுமாா் ரூ.41 லட்சம் மதிப்புள்ள 410 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோா் குண்டா் சட்டத்தின் கீழ் சிற...

நாமக்கல்லில் அவசியம் இன்றி சுற்றித் திரிந்தவர்கள் கைது

Image
நாமக்கலில்அவசியமின்றி சுற்றித்திரிந்த 68 பேர் அதிரடி கைது நாமக்கல்: தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அவசியமின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். நேற்று, 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 68 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து, இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மார்ச், 25 முதல், இதுவரை, 13 ஆயிரத்து, 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதன் மூலம், 18 ஆயிரத்து, 871 பேர் கைது செய்யப்பட்டு, 6,405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.* மாவட்டத்தில், நேற்று காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை, முக கவசம் அணியாமல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த, 250 பேரை, 16 இடங்களில் நிறுத்திய போலீசார், அவர்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறை, அறிவுரைகளை வழங்கினர்.

தற்போது வணிகர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் பற்றி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் விவாதிப்பு

Image
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 20/08/2020 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் மாவட்ட பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தற்போது வணிகர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: 1. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் வணிகர் சங்க பேரமைப்பு முழு ஒத்துழைப்பையும் தரும் என உறுதியளிக்கிறது. 2. வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரத்தில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், அதனை நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது அறிக்கை மூலமாக தெளிவுபடுத்த வேண்டும் என மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு கேட்டுக்கொள்கிறது. 3. கொரோனா பரவுதலை தட...

தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruting Agency) பற்றிய முழு விபரம்

Image
தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruting Agency) – தமிழக இளைஞர்களுக்கு சரியான தருணம். பொதுவாகவே அரசுப் பணி நாடும் தமிழக இளைஞர்கள் 95% பேர் குதித்தால் தலை கீழாக தான் குதிப்பேன் என்பது போல TNPSC நடத்தும் அல்லது தமிழக அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்களின் சரி விகித பிரதிநிதித்துவம் எந்த மத்திய அரசு அலுவலகங்களிலும் பிரதிபலிப்பதில்லை. காரணம் வட இந்திய மாநில இளைஞர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்று இந்தியா முழுக்க வியாபித்து இருக்கிறார்கள்.. அது கடை கோடி கன்னியாகுமரி ரயில்வே நிலையம் ஆகட்டும் அல்லது லடாக் பள்ளத்தாக்கில் 14,500 அடி உயரத்தில் உள்ள SBI வங்கி ஆகட்டும்... வட இந்திய இளைஞர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக இளைஞர்களின் கனவும் கடவுளும் TNPSC தான். தமிழகத்தை தாண்டி நம்ம பசங்களோட அந்த வீர தீரம் லாம் பொட்டி பாம்பாக அடங்கி விடும். இதற்கு காரணங்கள் மூன்று   1. மத்திய அரசு தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருப்பது.   2. மத்திய அரசு தேர்வுகள் நமக்கு...

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்

Image
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவின் சார்பில் நேற்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த கொரோனா பேரிடர் காலத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் பலர் நேரில் முன்வந்து ரத்ததானம் செய்வது பாராட்டக் கூடிய விஷயமாக தற்பொழுது கருதப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இங்கு நடைபெற்ற ரத்ததான முகாமில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்ட டிஜிட்டல் செய்திகளில் நாமக்கல் மாவட்டத்தில் ரத்த தானம் வழங்கும் விழிப்புணர்வு மக்களிடையே மிக குறைவாக இருப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் இளைஞர்கள் மற்றும் மக்கள் பலர் கலந்துகொண்டு ஆர்வமுடன் இரத்த தானம் அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெறிவித்து வருகின்றனர்.

நாளை பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை அறிவிப்பு

Image
மாதந்தோறும் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு இதனால் ராசிபுரம் முத்து காளிப்பட்டி மசக்காளிப்பட்டி புதுப்பாளையம் பட்டணம் முனியப்பன்பாளையம் வடுகம் கவுண்டன்பாளையம் முருங்கபட்டி போடிநாயக்கன்பட்டி மூலப்பாளையம் அரசம்பாளையம் வேலம்பாளையம்  வெள்ளாளப்பட்டி கூனவேலம்பட்டிபுதூர் கதிராநல்லூர் நத்தமேடு கண்ணுற்பட்டி சிங்களாந்தபுரம் குருசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

ஒளிரும் ஸ்டிக்கரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் அரசின் புதிய சட்டத்திருத்தம் காரணமாக வாகன உரிமையாளர்கள் வருத்தம்

Image
இந்தியாவில் சாலை சரக்கு போக்குவரத்தில் நாமக்கல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மத்திய அரசு சாலை போக்குவரத்தில் தற்போது சில பல கெடுபிடிகளால், லாரிகளை இயக்குவதில் பெரும் சிரமமாக உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.   புதிய மத்திய அரசின் சாலை போக்குவரத்து திருத்த சட்டத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் (REFLECTIVE STICKER) ஒட்டும் முறையில் குறிப்பிட்ட கம்பெனி ஸ்டிக்கரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பு அந்த குறிப்பிட்ட கம்பனிக்கு மட்டும் தான் சாதகமாக உள்ளதாக லாரி உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கிறனர்.  லாரி உரிமையாளர் வாகனத்தை ஆர்.டி.ஓ  (RTO) அலுவலககத்தில் தகுதி சான்றிதழ் (FITNESS CERTIFICATE) பெறுவதற்கு சென்றபோது, தகுதி சான்றிதழ் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார் காரணம் ஒளிரும் ஸ்டிக்கர் சாதாரண ஸ்டிக்கர் என்பதால். இந்த செயலால் லாரி உரிமையாளர்கள் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக லாரியின்   உரிமையாளர் தெரிவிக்கின்றனர். “சாதாரண ஸ்டிக்கரின் விலை - ரூபாய் 500/- கம்பெனியின் ஸ்டிக்கரின் விலை - ரூபாய...

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களின் விபரம்

Image
வரதராஜ பெருமாள் கோவில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தையில் இருந்து பிரிந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலும், சேந்தமங்கலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது அருள்மிகு நைனா மலை வரதராஜப் பெருமாள் கோவில். இது நாமக்கல்லில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது! புரட்டாசி விரதத்துக்கு பெயர்பெற்ற கோவில்  புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து சனிக்கிழமை மலையேறி பெருமாளை தரிசித்து வீட்டிற்கு சென்று காய்கறி படையல் செய்து வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்ற பட்டு வருகிறது. நைனாமலை நாமக்கல்லில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதிக்கு அருகில் உள்ள காளப்ப நாயக்கன் பட்டிக்கு அருகில் உள்ள செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் இப்பகுதியில் புகழ் பெற்றவர் . நாமக்கல் மாவட்டத்தில் வேற்று மொழி பேசுபவர்கள் வாழ்வதாலும், பல மண்ணர்கள் இப்பகுதியை முன்பு ஆண்டு வந்ததாலும், நைனா என்றால் தந்தை என்று பொருள் கடவுளை தந்தை என்று கூறும் வழக்கம் இருப்பதால் இம்மலை...

நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்களே Bio Diesel பற்றிய ஒரு எளிய புரிதல்

Image
பயோடீசல் லிட்டருக்கு 10 ரூவா கம்மி. ஆகுற மீதிக்கு 79 ரூவா போட்டு டீசல் அடிச்சா என்னத்துக்கு ஆவுறது. இது ஒரு Group பயோ டீசல் பயோடீசல் ன்னு அடிச்சி பிஸ்டன் ஹெட்டுல இருந்து நாசில் பம்பு வரைக்கும் வேலை வச்சுடும். மொத்தமா அம்பதாயிரம் ஒரு லட்சம்னனு செலவு பண்ணுறதுக்கு பத்து ரூவா அதிகமா குடுத்து டீசலே அடிச்சிக்கலாம் இது இன்னொரு group சரி நம்ம ஊர்ல நடக்குற பயோ டீசல் பஞ்சாயத்த பாக்குறதுக்கு முன்ன இந்த பயோ டீசல் ன்னா என்ன ன்னு பாப்போம்.  ஆதி மனிதன் வேட்டை சமூகமாக இருந்த காலத்துல நெருப்பை கண்டுபிடிச்சி வேட்டையாடுன விலங்குகள தீயில சுட்டு சாப்பிட ஆரம்பிச்சான். அது தான் நவீன அறிவியலோட தொடக்கமா கருதப்படுது. காலம் போகப்போக மனிதனோட வாழ்வியல் தேவைகள் அதிகரிச்சுது. அதன் பயனா கன்டுபிடிக்கப்பட்டது தான் சக்கரம். காலச்சக்கரம் சுழல சுழல வேட்டையாடியவன் வேளாண்மை செய்ய ஆரம்பிச்சான். அதுக்காக வேண்டி ஆற்றங்கரைகளை நோக்கி நகர ஆரம்பிச்சான். அப்படி நகரும்போது, தான் கண்டிபிடிச்ச சக்கரம் மூலம் வண்டிகளை செய்து உழவுக்காக பிடித்துவரப்பட்ட கால்நடைகளை வைத்து வண்டியிழுக்க வைத்தான். கால ஓட்டத்தில் கழ...