பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்க தடை

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் நேற்று மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 


ஆடி பதினெட்டாம் நாள் தமிழகம் முழுவதும் அனைத்து மக்களால் கொண்டாடப்படும் மிகச் சிறந்த விழாவாகும் இந்நிலையில் இந்த விழாவின் போது மக்கள் அனைவரும் அருகில் உள்ள நீர் நிலைகளில் புனித நீராடி கடவுளை வணங்கிச் செல்வது வழக்கம்.


 இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் பரவி வரும் காரணமாக நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் மாவட்டத்தில் முழுவதும் உள்ள மக்களுக்கு காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு போட்டு மக்கள் கூட தடை என அறிவித்திருந்தார். 


இந்நிலையில் அதை நடைமுறைப்படுத்தும் விதமாக நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை அடுத்த பிலிக்கல்பாளையம் ஊராட்சி நாளை அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க தடை என அறிவிப்பு பலகை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

Comments

Popular posts from this blog

மக்களை தொடர்ந்து அலைக்கழிக்கும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு பணியாளர்கள்

நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்களே Bio Diesel பற்றிய ஒரு எளிய புரிதல்

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிப்பு