திருச்செங்கோடு to பரமத்தி வேலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
திருச்செங்கோடு to பரமத்தி வேலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மையில் தூரத்திற்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.
திருச்செங்கோடு நகரில் அதிகம் கனரக வாகனங்களின் போக்குவரத்து மிகுதியாக இருப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகின்றனர்.
ஒரு கனரக வாகனம் செல்லும் போது அதன் பின்னால் கிட்டத்தட்ட 500 மீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றனர் முன்னாள் சென்ற கனரக வாகனம் தன் இலக்கை அடைந்த பின்னரே பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியும் நிலை உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அப்பகுதியில் சற்று அதிகமாக காணப்படுவதால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களும் ஒரே சமயத்தில் பயணிக்கும் போது இது போன்ற கடுமையான போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படுகின்றன.
இதற்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் தரப்பிலிருந்து ரிங் ரோடு மற்றும் சாலையை அகலப்படுத்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளனர்.
இருப்பினும் கொரோனா ஊரடங்கு தளர்வில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை நேற்று அறிவித்துள்ளது இந்நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்குவது உறுதியாகி இருப்பதால் இது போன்ற கடுமையான போக்குவரத்து நெரிசலால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment