நாமக்கல்லில் அவசியம் இன்றி சுற்றித் திரிந்தவர்கள் கைது
நாமக்கலில்அவசியமின்றி சுற்றித்திரிந்த 68 பேர் அதிரடி கைது
நாமக்கல்: தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அவசியமின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். நேற்று, 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 68 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மார்ச், 25 முதல், இதுவரை, 13 ஆயிரத்து, 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன் மூலம், 18 ஆயிரத்து, 871 பேர் கைது செய்யப்பட்டு, 6,405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.* மாவட்டத்தில், நேற்று காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை, முக கவசம் அணியாமல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த, 250 பேரை, 16 இடங்களில் நிறுத்திய போலீசார், அவர்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறை, அறிவுரைகளை வழங்கினர்.
Comments
Post a Comment