நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதித்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் தற்பொழுது கொரோனா நோயினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களின் மூலமாகவே தற்போது நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா நோய் பரவல் ஏற்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதித்து இறந்தவர்களின் பட்டியலில் மேலும் ஒன்று கூடியுள்ளது அதாவது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா நோய் தொற்றுக்கு நேற்று பலியானார் இதனை அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை7 ஆக அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment