ஒளிரும் ஸ்டிக்கரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் அரசின் புதிய சட்டத்திருத்தம் காரணமாக வாகன உரிமையாளர்கள் வருத்தம்
இந்தியாவில் சாலை சரக்கு போக்குவரத்தில் நாமக்கல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மத்திய அரசு சாலை போக்குவரத்தில் தற்போது சில பல கெடுபிடிகளால், லாரிகளை இயக்குவதில் பெரும் சிரமமாக உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய மத்திய அரசின் சாலை போக்குவரத்து திருத்த சட்டத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் (REFLECTIVE STICKER) ஒட்டும் முறையில் குறிப்பிட்ட கம்பெனி ஸ்டிக்கரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பு அந்த குறிப்பிட்ட கம்பனிக்கு மட்டும் தான் சாதகமாக உள்ளதாக லாரி உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கிறனர்.
லாரி உரிமையாளர் வாகனத்தை ஆர்.டி.ஓ (RTO) அலுவலககத்தில் தகுதி சான்றிதழ் (FITNESS CERTIFICATE) பெறுவதற்கு சென்றபோது, தகுதி சான்றிதழ் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார் காரணம் ஒளிரும் ஸ்டிக்கர் சாதாரண ஸ்டிக்கர் என்பதால். இந்த செயலால் லாரி உரிமையாளர்கள் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக லாரியின் உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.
“சாதாரண ஸ்டிக்கரின் விலை - ரூபாய் 500/-
கம்பெனியின் ஸ்டிக்கரின் விலை - ரூபாய் 3000 முதல் 4000 வரை” உள்ளதால் புதிய சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்யும்படி லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment