நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவின் சார்பில் நேற்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.


இந்த கொரோனா பேரிடர் காலத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் பலர் நேரில் முன்வந்து ரத்ததானம் செய்வது பாராட்டக் கூடிய விஷயமாக தற்பொழுது கருதப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் இங்கு நடைபெற்ற ரத்ததான முகாமில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.


ஒரு மாதத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்ட டிஜிட்டல் செய்திகளில் நாமக்கல் மாவட்டத்தில் ரத்த தானம் வழங்கும் விழிப்புணர்வு மக்களிடையே மிக குறைவாக இருப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில் அதற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் இளைஞர்கள் மற்றும் மக்கள் பலர் கலந்துகொண்டு ஆர்வமுடன் இரத்த தானம் அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெறிவித்து வருகின்றனர்.

Comments