தற்போது வணிகர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் பற்றி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் விவாதிப்பு

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 20/08/2020 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் மாவட்ட பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


கூட்டத்தில், தற்போது வணிகர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:




1. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் வணிகர் சங்க பேரமைப்பு முழு ஒத்துழைப்பையும் தரும் என உறுதியளிக்கிறது.


2. வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரத்தில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், அதனை நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது அறிக்கை மூலமாக தெளிவுபடுத்த வேண்டும் என மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு கேட்டுக்கொள்கிறது.

3. கொரோனா பரவுதலை தடுக்கும் விதத்தில் அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் வணிகர்கள் முறையாக கடைபிடித்து பாதுகாப்புடன் வணிகத்தை தொடர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது. 


நிர்வாகிகள் கூட்டம், அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி பின்பற்றி பாதுகாப்பாக நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்