நம் நாமக்கல்லில் இரத்ததானம் செய்ய விழிப்புணர்வு மக்களிடையே மிக குறைவாக உள்ளதா?

மக்கள் பாதை நண்பர்கள்,
உதிரம் நாமக்கல்.
Namakkal blood Toner's group
அறம் இரத்ததானம் இயக்கம்
ஜேசிஐ, ரோட்டரி, லயன்ஸ் கிளப்.





என பல வாட்சப் குரூப்பில் 1000 பேருக்கு மேல் இருந்தாலும் அவசர தேவைக்கு குழுவில் பதிவிடும் போது இரத்ததானம் செய்ய முன்னுக்கு வருபவர் மிக குறைவாகவே உள்ளனர்

ஒரு சிலரே முயற்சி எடுத்து முயற்சி எடுத்து இரத்த தேவையை பூர்த்தி செய்கின்றனர்.

நம் நாமக்கல்லில் இளைஞர்கள் பலர் உள்ளனர். பல தொழில் புரிகின்றனர் இரத்ததானம் செய்ய 10 நிமிடம் போதும்



ஆகவே புதிய இளைஞர்கள் இரத்ததானம் செய்ய முன்வர வேண்டுகிறோம்.

அந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு. இரத்ததானம் செய்ய ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த குழுவில் இணைந்து எங்களோடு செயல்பட வேண்டுகிறோம்

இரத்ததானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.


3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை

இரத்ததானத்தின் தேவைகள்:

அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.

இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.


ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 50,000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவைப்படுகிறார்கள்

பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு A & O குரூப் ஆகும்

ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.

ஒரு ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் கூட இரத்தம் தேவைப்படலாம்.


இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்

இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
 
இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராக இருத்தல் கூடாது.

கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்.

இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.

இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

நம் நாமக்கல்லில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் இருக்கும் விபத்து மற்றும் அவசர பிரிவு மற்றும் ஆபரேசன் செய்ய தினந்தோறும் பலருக்கு இரத்தம் தேவை என எங்களை அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவர் 18 வயதிலிருந்து 60 வயதுவரை ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம், பெண்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்

கிராமத்தினர் கூட அறியாமையில் இருக்கலாம். நகரத்தில் இருக்கும் பலர் தங்களது சொந்தக்காரர்களின் தேவைக்கே கூட அடுத்தவர்களை இரத்ததானம் கேட்கும் நிலையில் இருக்கிறார்கள்

இந்த நிலையை கண்டிப்பாக நாம் மாற்ற வேண்டும்

இளைஞர்கள் இரத்ததானம் செய்யுங்கள். மேலும் உங்களுக்கு தெரிந்தவர்களை இரத்ததானம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

தயவுசெய்து இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்