கொல்லிமலை அடிவார சோதனை சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள்
இன்று ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் பலர் புண்ணிய ஸ்தலங்கள் மற்றும் அருகில் உள்ள நீர் நிலைகளில் புனித நீராடி கடவுளைப் பிரார்த்தித்து மழை வர வேண்டுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் ஆற்றிலோ குளத்திலோ குளிக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் தடை விதித்து மற்றும் மக்கள் ஒரே இடத்தில் பலர் கூடுவது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் தங்களது பிரார்த்தனைகளை இந்த வருடம் வீட்டிலேயே முடித்துக் கொண்டனர் இருப்பினும் வருடா வருடம் இந்த ஆடிப்பெருக்கின் போது கொல்லிமலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேகங்கள் கடவுளுக்கு நடத்தப்படும்.
இந்நிலையில் இந்த வருடம் அதைக் காண பல மக்கள் கொல்லிமலை பகுதிக்கு வரலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்திற்குள் பயணிக்க E Pass அவசியமில்லை என்றாலும் இருப்பினும் ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் கொல்லிமலை அடிவாரமான காரவல்லி பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
Post a Comment