லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அரசு நிறைவேற்றா விட்டால் வேலை நிறுத்தம் சம்மேளன தலைவர் தகவல்
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது கொரோனா காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்த நிலையில் அதன் பயனை பயன்பாடுகளுக்கு வழங்காமல் மத்திய அரசு கலால் வரியையும்
மாநில அரசு வாட் வரியையும் உயர்த்தியுள்ளது இதனை குறைக்க வேண்டும்.
டெல்லி அரசு வாட் வரியை குறைத்தது போல் தமிழ்நாடு அரசும் டீசல் மீதான வாட் வரியை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல் 50 விழுக்காடு லாரிகள் மட்டுமே இயங்கும் இந்நிலையில் லாரி களுக்கான காலாண்டு வரையறை செய்திட வேண்டும்.
வாகனங்களை புதுப்பிக்கும் பொழுது ரிபிலட் ஸ்டிக்கரை ஒரே நிறுவனத்தில் மட்டுமே வாங்கிட வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
ஏற்கனவே வேக கட்டுப்பாட்டு கருவி களை வைத்துள்ள வாகனங்களுக்கு புதிய வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் தவணை செலுத்துவதை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டித்து வட்டியில்லாமல் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன அனுமதி புதுப்பித்தல்
ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகும் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் தற்போது விபத்துகள் அதிகளவு குறைந்துள்ள நிலையில் காப்பீடு நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்குவதால் காப்பீடு காலாவதியாகும் பாலிசிகளுக்கு அதே நிலையில் மேலும் ஆறு மாதத்திற்கு நிறுத்தவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இரண்டு வாரத்தில் நிறைவேற்றவில்லை என்றால் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற உள்ள சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் வேலை நிறுத்தம் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
பேட்டியின்போது மாநிலச் செயலாளர் வாங்கிலி பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment