Posts

Showing posts from 2021

மக்களை தொடர்ந்து அலைக்கழிக்கும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கு பணியாளர்கள்

Image
தமிழக அரசின் குறைந்த விலையில் மக்கள் பயன்படும் வகையில் அம்மா சிமெண்ட் எனப்படும் சிமெண்ட் மூட்டைகள் வீடு பழுதுபார்த்தல் மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் பெற்று வீடு கட்டும் நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் நல்ல தரமான சிமென்ட் மூட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக முன்பாகவே பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்ய இருப்பவர்கள் அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்களிடம் சிமெண்ட் மூட்டைகளை பெறுவதற்கு அதிகமாக அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். அதாவது இரண்டாவது முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகு அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது அதாவது அரசு ஊழியர்கள் 30% பணியாற்றலாம் என அறிவித்தது இருப்பினும் கடந்த 2 மாதமாக அம்மா சிமெண்ட் கிடங்கு ஊழியர்கள் பணிக்கு திரும்பாததால் மோகனூர் மற்றும் மோகனூர் அம்மா சிமெண்ட் கிடங்கை நம்பி கட்டிட வேலையை ஆரம்பித்துள்ள மக்கள் தவித்து வருகின்றனர். தினமும் ஐந்து முதல் ஆறு நபர்கள் இந்த அம்மா சிமெண்ட் கிடங்கு வந்த வண்ணம் உள்ளனர். அ...

கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் நோய் தடுப்பு பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Image
நாமக்கல் நகராட்சி பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி நாமக்கல் நகராட்சி ரமேஷ் தியேட்டர் அருகில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை ஆய்வு செய்து வருகின்றனர்.  இப்பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மருந்து, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கிடைப்பது குறித்து ஆய்வு செய்தார். இதுபோல் R.P.புதூர், E.B காலனி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் ஆகியோர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணி நிறுத்தம் 50 லட்சம் செங்கற்கள் தேக்கம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், 50 லட்சம் செங்கற்கள் தேங்கியுள்ளன. நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தினமும், 5 லட்சம் செங்கற்கள் தயார் செய்யப்பட்டு கோவை, ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.   திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த பகுதிகளில் தங்கி, செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்நிலையில், கடந்த மாதம் முதல் முழு ஊரடங்கு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.  இதனால் கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய, 50 லட்சம் செங்கற்கள் தேங்கியுள்ளன.  செங்கல் தயாரிப்பதை பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இந்த பகுதியில் மட்டும், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலையிழந்து தவித்து வருகின்றன.  இந்நிலையில், க...

நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
நாமக்கல் மாவட்டத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை. அடுத்த மூன்று நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் லேசானமேகமூட்டத்துடன், சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.  காற்றின் திசை பெரும்பாலும் தென் மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு, 8 கி.மீ., என்றளவில் வீசும். காற்றின் ஈரப்பதம், 40.85 சதவீதமாக நிலவும். எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வில் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயர்ச்சி மற்றும் குடற்புண் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. எனவே பண்ணைகளில் பகல் நேரங்களில் வெப்ப நிலை அதிகரித்து கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதால் நீர் தெளிப்பானை...

சுற்றுலா மையங்களை மேம்படுத்த நடவடிக்கை: நாமக்கல்லில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

Image
''தமிழகத்தில் உள்ள, 1,000 சுற்றுலா தலங்களில், 295 சுற்றுலா மையங்களை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன,'' என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில், நன்கொடையாளர்கள் மூலம், 23 மல்டி பாரா மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கருவிகளை வழங்கினார். திருநங்கை காயத்ரிஸ்ரீக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக தற்காலிகமாக பணியாற்ற உத்தரவிட்டு, அதற்கான பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் கூறியதாவது. தமிழகத்தில் 18 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. எக்கோ டூரிசம், மெடிக்கல் டூரீசம், பீச் டூரிசம் உள்ளிட்ட வகைகளில், சுற்றுலாவை மேம்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள, 1,000 சுற்றுலா தலங்களில், 295 சுற்றுலா மையங்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.  கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, லேசர் ஒளி அமைப்பதற்கு உத்தரவ...

கொல்லிமலை அடிவாரத்துக்கு தண்ணீர் வரத்து தொடக்கம்

Image
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த, 3 வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.  இந்த மழையினால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, மாசிலா அருவி, சின்னருவி உள்ளிட்ட பல்வேறு பகுதி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதே போல் கொல்லிமலையையொட்டிள்ள பகுதியான செம்மேடு, சோளக்காடு, மேட்டு விளாராம், பின்னம், வீரகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழை நீர், வனப்பகுதி வழியாக மலையில் இருந்து காற்றாற்று வெள்ளமாக மாறி கொல்லிமலை அடிவாரப்பகுதிகளான காரவள்ளி,பெரியசாமி கோவில், பாளையபாளையம் கோம்பை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி,குளங்களுக்கு தண்ணீர் வரும் வகையில் நீர் வழிப்பாதை உள்ளது.   இந்நிலையில் கடந்த வாரங்களில் இந்த மலைப்பகுதியையொட்டிள்ள பகுதிகளிலும் கன மழை பெய்ததால் வனத்தின் வழியாக மழை நீர் காற்றாற்று வெள்ளமாக மாறி தாழ்வான பகுதியான முத்துக்காப்பட்டி அருகே உள்ள பெரியசாமி கோவில் அடிவார பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு வர தொடங்கியுள்ளது.

நாமக்கல்லில் நாளை (03.06.2021) கொரோனா தடுப்பூசி முகாம் நகராட்சி ஆணையர் தகவல்

Image
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் பொதுமக்கள் தற்பொழுது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வருகிறார்கள். நாமக்கல் நகரப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள நாளை நாமக்கல் நகரில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து  நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது.  நாமக்கல் நகராட்சி கொரோனா வைரஸ் ( COVID - 19 ) நோய் தொற்று அதிகரித்து வருவதால் நகரப்பகுதிகளில் பொதுமக்களுக்கு கோவிசீல்டு தடுப்பூசி முதல் மற்றும் 2 தவணை கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்ட 1500 நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும்.  இதற்கான தடுப்பூசி முகாம் நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் உள்ள சக்திமயில் திருமணமண்டபத்தில் நாளை வியாழக்கிழமை (03.06.2021) காலை 10.00 மணி முதல் முகாம் நடைபெற உள்ளது . மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கப்படுகிறது இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Image
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்கள் இடியுடன் கூடிய கோடை மழை எதிர்பார்க்கப்படுகிறது.  கால்நடைகளை மரங்களுக்கு அடியில் அல்லது மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் உள்ள இடங்களுக்கு அருகில் அல்லது கம்பி வேலியின் அருகில் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை மழை பெய்யும் போது மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடைகளுக்க...

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 30 மருத்துவர்கள் நியமனம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் அரசு அனுமதியின் பேரில், தற்காலிக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானது.  இதன்படி, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைகளில் நேர்காணல் நடந்தது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலில், கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சை பணிகளுக்காக 30 மருத்துவர்கள், 22 செவிலியர்கள், 25 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் உடனே பணியில் சேர்வார்கள் என்று அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Image
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்  நாமக்கல் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். ஆகஸ்டு 27-ந் தேதி கடைசிநாள் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி வரை பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம...

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

Image
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், பெண்களுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   இந்த குழுவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர், ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகள் இல்லத்தை நடத்துபர்கள் என 7 பேர் அடங்குவர். இக்குழுவினர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோரை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுப்பர். எனவே, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற ...

நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு

Image
நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வெளியீடு தமிழ்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் தடையில்லாமல் பாதுகாப்புடன் வீடு தேடி வந்துசேர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இப்பொருட்கள் தடையின்றியும், சரியான விலையிலும் கிடைக்கிறதா என்பதை அறிய தமிழ்நாடு முழுக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தந்து வருகின்றனர்.  பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் வணிகர் சங்க பிரதிநிதிகளான  ஜெயகுமார் வெள்ளையன்   98437 98438 பொன்.வீரக்குமார் -94431 59359 N.P.கிருஷ்ணன் -91590 25307 சேந்தை க...

நாமக்கல் நகர காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் நாமக்கல் கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் சார்பில் காவலர் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு

Image
நாமக்கல் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள 270 காவலர் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில், நாமக்கல் நகர காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் நாமக்கல் கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் நிறுவனத்தினர் இணைந்து இலவச காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுஜாதா, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார், துணை கண்காணிப்பாளர் காந்தி, நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் காவலர்களுக்கு காய்கறி தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட செயலாளர் வீரக்குமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், காய்கறி வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜசேகர், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிப்பு

Image
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், 1,956 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே வாகன சோதனையின் போது ஊரடங்கை மீறும் நபர்கள் மற்றும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வெளியே சுற்றும் நபர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, அதாவது கடந்த 6 நாட்களில் முககவசம் அணியாத 4,115 பேர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இ...

ரெயில்-விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்

Image
நாளை முதல் அமுலுக்கு வருகிறது ஜூன் 7-ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளநிலையில், ரயில், விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதற்கட்ட தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதில் விமான ரெயில் நிலையங்களுக்கு செல்வோர் இபதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.  வீடுகளில் இருந்து ரெயில் விமான நிலையம் செல்வோரும், அங்கிருந்து மறுபடியும் வீடுகளுக்கு செல்வோரும் கட்டாயம் இ பதிவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ பதிவு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நாளை 1.06.2021 (செவ்வாய்க்கிழமை) முதல் அமலாக இருக்கும் 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்திலும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலான முழு ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுக...

காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் நேரம் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு

Image
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கப் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாதாவது காய்கறி விற்பனை மற்றும் மளிகை பொருட்கள் டோர் டெலிவரியை காலை 6 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அறிவித்துள்ளத நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் முறையான அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே இந்த சேவையை செய்ய இயலும். அனுமதி பெறாத வாகனங்கள் டோர் டெலிவரி செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. எக்காரணம் கொண்டும் கடைகளில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொத்த வியாபாரம் செய்வோர் சில்லரை வணிகர்களிடம் ஆர்டர் பெற்று அதனை வாகனம் மூலமாக நேரடியாக அவர்களின் கடைகளுக்கு டெலிவரி செய்ய வேண்டும். டோர் டெலிவரியை தவிர, எக்காரணம் கொண்டும் கடைகளில் பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கோ சில்லரை வணிகர்களுக்...

முழு ஊரடங்கால் பரமத்தி வேலூர் பகுதியில் வாழை மரத்தில் பழுத்து வீணாகும் பழங்கள் அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

Image
முழு ஊரடங்கால் பரமத்தி வேலூர், மோகனூர் சுற்றுவட்டாரத்தில் பலஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைப்பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாழை மரத்தில் பழங்கள் பழுத்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுா், மோகனுார் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. இதை மையப்படுத்தி காவிரிக் கரையோரத்தில் பல விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பரமத்தி வேலுார், பாண்டமங்கலம், பொத்தனூர், வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்துார் உள்ளிட்ட பகுதியில் வாழை சாகுபடி பிரதானமாக உள்ளது. பூவன், ரஸ்தாளி, பச்சை நாடான் உள்ளிட்ட ரக வாழை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் வாழைப் பழங்கள் பரமத்தி வேலுார் வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, விவசாய தோட்டங்களுக்கு நேரடியாக வாழையை கொ...

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 100 படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் உத்தரவு

Image
நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 100 படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது உத்தரவிட்டு உள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் மாநில கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும், நோயாளிகளின் தொலைபேசி அழைப்பின் பேரில் மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டார். மேலும் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளின் உடல் நிலை குறித்து சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு விசாரணை செய்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையும் டாக்டர் தாரேஸ் அகமது பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் நோய...

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2.13 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது; அமைச்சர் மதிவேந்தன் தகவல்

Image
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணிகள், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வழங்கும் பணிகள், பால் மற்றும் குடிநீர் வினியோக பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது.நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 971 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய விருப்பமுள்ளவர்கள், அதற்கு முறையாக நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.  காய்கறி விற்பனை செய்யும் நபர்களுக்கு தினந்தோறும் உடல் வெப்பநிலை பர...

நாமக்கல் எலெக்டிரிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

Image
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான நாமக்கல் எலெக்ட்ரிக்கல் வியாபாரிகள் சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டன. நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார் முன்னிலையில், எலெக்ட்ரிகல் சங்க தலைவர் சங்கர் தலைமையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் மல்டி ஆக்சிஜன் மீட்டர், என்95 மற்றும் சர்ஜிகல் முககவசங்கள், ஆக்சிஜன் முககவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட ரூபாய் 1,60,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், மாவட்ட செயலாளர் வீரக்குமார், எலெக்ட்ரிக்கல் சங்க உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

கோடை உழவால் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்; பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவிப்பு

Image
கோடை உழவு செய்வதன் மூலம் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே இது கோடை உழவு செய்ய ஏற்ற தருணமாகும். கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்வது மிகவும் அவசியமானது. வயல்களில் இரும்பு கலப்பை அல்லது டிராக்டர் மூலம் குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதனால் களைகளான செடிகள், புல், பூண்டுகளின் வேர்கள் அறுபட்டு, காய்ந்து அகற்றப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் புதைந்திருக்கும் புழுக்கள் நிலத்தின் மேற்பரப்பிற்கு வருகின்றன. அப்போது பறவைகள் அவற்றை பிடித்து உண்பதால் கூட்டுப்புழுக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. மேலும் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் மண்ணில் நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. மழைநீர் பூமிக்குள் இலகுவாக சென்று மண்ணின் ஈரப்பதத்தை காக்கிறது. மேலும், நாற்றங்கால் மற்றும் நடவு வயல் உற்பத்தி எளிதாகிறது. பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு இடப்படும் உரம் அனைத...

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இருப்பு குறித்து அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

Image
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் கொள்கலனில் ஆக்சிஜன் இருப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு, அதில் இருந்து குழாய்கள் மூலம் மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு வார்டுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்கலனில் வாரம் ஒரு முறை திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்ட நிலையில், தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் 2 நாட்களுக்கு ஒரு முறை திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது.  மேலும் ஆக்சிஜன் அளவை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு தினந்தோறும் மூன்று முறை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் படுக்கை வசதி வழங்குவதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து, கண்காணிப்பு தேவைபடுப...

காய்கறி விற்பனையில் குறை இருந்தால் புகார் செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

Image
காய்கறி விற்பனையில் குறைபாடுகள் இருந்தால் புகார் செய்ய மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடமிருந்து காய்கறி மற்றும் பழங்களை கொள்முதல் செய்து வாகனங்களில் சென்று விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை சுமார் 500 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இச்சேவை தொடர்பான குறைபாடுகளை தெரிவிக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த தகவல் மையத்தை  94891 34961 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்கள பணியாளர்களுக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் முட்டை வழங்கினார்

Image
நாமக்கல் நகராட்சியில் இன்று காலை 10 மணி அளவில் நகராட்சி தூய்மை பணியாளர்கள்  மற்றும் முன்கள பணியாளர்களுக்கு  நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்  முட்டை வழங்கினார்.    இதற்கான நிகழ்ச்சி நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சுமார் 700 முன்கள பணியாளர்களுக்கு முட்டை அட்டைகளை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம் அவர்கள் வழங்கினார். அவருடன் நாமக்கல் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் திமுக மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன்,  நகர பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த், பூபதி ,பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், சரவணன், மூர்த்தி, மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பாலாஜி கலந்துகொண்டனர்.   மொத்தம் 21000 முட்டைகளை முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்

Image
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.துர்கா மூர்த்தி மற்றும் நகராட்சி ஆணையர் திரு.பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலையில் மளிகை மற்றும் காய்கறி வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.  கூட்டத்தில், தளர்வுகள் இல்லா ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்கு தடையில்லாமல் பாதுகாப்புடன் நேரடியாக காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வினியோகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, நடமாடும் விற்பனை வண்டிகள் மூலமாக காய்கறிகளை தினசரி பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தினை கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் பொதுமக்களுக்கு தடையின்றி மளிகை பொருட்கள் கிடைக்க நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்பாடுகள் செய்து வந்தது. இதனை தொடர்ந்து, காலை 6 மணி முதல் காலை  10 மணி வரை மட்டும் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் அனு...

தன்னார்வலர்கள் குழுவைக் கௌரவித்த நாமக்கல் லாரி ஓனர்

Image
நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கொரோனா தொற்றுக் காலத்தில், தன்னுடைய நலன் பாராமல் எளியோரின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வரும்  தன்னலார்வலர்களின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளார் நாமக்கல் ரத்னகலா லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் துரைசாமி அவர்கள்  நாமக்கல் தன்னலார்வர்கள் குழுவில் உள்ள சுமார் ஐம்பது இருசக்கர வாகனங்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும் நாமக்கல் நளா ஹோட்டல் சார்பில் தினந்தோறும் இருவேளை டீ, காபி உளுந்தகஞ்சி வழங்கி வருகின்றனர் நாடெங்கிலும் நோய்த் தொற்று அதிகமானது. சமூக இடைவெளி மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என எச்சரித்த மத்திய அரசு நோய் மேன்மேலும் பரவாமல் இருக்க  பொது ஊரடங்கினை தமிழக அரசு  அமல்படுத்த்தி உள்ளது.  திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் எளிய மக்களின் அன்றாடத் தேவைகள் முடக்கப்பட்டது. இவ்வேளையில், சாலையோர முதியோர்கள், பேருந்து நிலையங்களில் வசிப்போர்கள், அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள், வட...

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

Image
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நாளில் 6,683 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.  நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 44 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  முதல் நாளான நேற்று அரசு அறிவித்தபடி கொரோனா தொற்று எளிதில் ஏற்படக்கூடிய தொழிலாளர்கள், செய்தித்தாள்களை போடுபவர்கள், பால் விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், தெருக்களில் விற்பனை செய்பவர்கள், மருந்தகங்கள், மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், மின் வணிகம், கட்டுமான தொழிலாளர்கள், அனைத்து மாநில போக...

நாமக்கல்லில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்

Image
நாமக்கல்லில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே இதுகுறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பஸ் நிலையம் அருகே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அதன் உருவப்படம் சாலையில் வரையப்பட்டது. இந்த பணியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓவியர்கள் சுமார் 20 பேர் ஈடுபட்டனர். அதில் முககவசம் அணிவோம், தடுப்பூசி போட்டு கொள்வோம், கொரோனாவை ஒழிப்போம் என்ற வாசகமும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகமும் இடம் பெற்று இருந்தன.  இதேபோல் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு எமதர்மன் கொரோனா வடிவில் வருவது போன்றும், சேலம் ரோடு கார்னர் பகுதியிலும் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டு இருந்தது. இதுதவிர ஆங்காங்கே சாலையில் முககவச படமும் வரையப்பட்டு இருந்தது.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்

Image
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மையம் (யூனிட்) தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் சில தினங்களில் தொடங்கப்படும். மேலும், 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பிருக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 28,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 931 ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டன

Image
கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி 2-வது நாளாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பஸ், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை, பஸ் நிலையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி இருந்தன. மாவட்டம் முழுவதும் மருந்து கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் நேற்று முதல் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 931 ரேஷன் கடைகளும் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதுவரை கொரோனா நிவாரண தொகை பெறாதவர்களுக்கும் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. இருப்பினும் ரேஷன்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்து இருந்தன.

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இன்று உறுப்பினர்கள் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் வருபவர்கள் மட்டுமே அனுமதி

Image
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தலின் படியும், அதிக கூட்டம் கூடுவதால் நோய் தொற்று பரவுதலை கருத்தில் கொண்டும் நாளை 26-05-2021 முதற்கட்டமாக நடைபெறும் முகாமில் சங்க உறுப்பினர் அடையாள அட்டையுடன் வரும் உறுப்பினர்களுக்கும், ஓட்டுநர் உரிமத்துடன் வரும் ஓட்டுநர்களுக்கும் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். எனவே பொதுமக்கள் யாருக்கும் இம்முதற்கட்ட முகாமில் தடுப்பூசி போடப்படாது என்பதனையும் தெரிவித்துள்ளனர். குறிப்பு 18 வயது பூர்த்தியாக 1நாள் இருந்தாலும் அதே போல் 44-வயது முடிந்து ஒரு நாள் ஆகியிருந்தாலும் தடுப்பூசி போடப்படாது ஆதார் அசல் /நகல் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் Contact 9442272299 இப்படிக்கு நிர்வாகிகள் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய நேர்காணல் அறிவிப்பு

Image
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக அளவிலான நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  அரசு மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்கு தங்குதடையின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக அத்தியாவசிய தேவையினை கருத்தில் கொண்டு கூடுதல் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பாரா மெடிக்கல் பணியாளர்களை தேவைக்கேற்ப தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திட  நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவமனை, குமாரபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் 27.05.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே தகுதியுள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்படுகிறது. மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி MBBS from Medical Colleges recognized Medical Council and Duly Registered with TNMC ஆகும்.    அலுவலர் பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ரூ.60,000/- ஆகும். செவிலியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி DGNM or B.Sc., Nursing with Nursing Council Re...

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

Image
தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது  26/5/2021மற்றும் 27/05/2021 ஆகிய இரு தினங்கள் இலவச கொரானா தடுப்பூசி முகாம் நாமக்கல், சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. முதல்முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் மட்டுமே  வரவேண்டும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். 18-வயது முதல் 44வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் தடுப்பூசி போட வருபவர்கள் ஒரினஜல் ஆதார் கார்ட் மற்றும் ஆதார் கார்ட் ஜெராக்ஸ்  கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை முகாம் நடைபெறும் பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம் குறிப்பு: 18 வயது பூர்த்தியாகி 1நாள் இருந்தாலும் அதே போல் 44-வயது முடிந்து ஒரு நாள் ஆகியிருந்தாலும் தடுப்பூசி போடப்படாது உறுப்பினர்களும் அவர்கள் குடும்பத்தாரும் டிரைவர்களும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமக்கல் தங்கம் மருத்துவமனை சார்பில் ரூ 1 லட்சம் கொரோனோ நிதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது

Image
நாமக்கல் தங்கம் மருத்துவமனை சார்பில் ரூ 1 லட்சம் கொரோனோ நிதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது  நாமக்கல் தங்கம் மருத்துவமனை சார்பில் மருத்துவமனை மேலாண் இயக்குநர் டாக்டர் குழந்தைவேல், நிர்வாக இயக்குநர் டாக்டர் தீப்தி மிஸ்ரா ஆகியோர் கோவிட் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களான 4000 N 95 முககவசங்கள், 10,000 கையுறைகள் மற்றும் அரசு கொரோனோ பாதுகாப்பு மற்றும் கொரோனோ ஒழிப்பு நிதிக்கு ₹1 லட்சம் நிதியை நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் வழங்கினார்கள்.  இந்நிகழ்ச்சியின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் உடனிருந்தார்.

தென்னைமரங்களில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு இது சிறந்த வழிமுறை வேளாண்மை அதிகாரி தகவல்

Image
தென்னை மரங்களை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த மைதாமாவு பசைகளை பயன்படுத்தலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தென்னை மரங்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.  இதில் முக்கியமாக ரூகோஸ் எனப்படும் வெள்ளைஈக்களின் தாக்குதல் உள்ளதால் தென்னையில் உள்ள சாறுகளை உறிஞ்சும் அபாயம் உள்ளது. இதனையடுத்து இந்த ஈக்கள் தென்னை ஓலைகளில் கீழ் பரப்பில் காணப்படும். இதனைத்தொடர்ந்து இந்த பூச்சியினால் தென்னை மரத்தில் கரும்புள்ளிகள் உருவாகி தென்னை ஓலைமுழுவதும் கருப்பு நிறமாக மாறுவதோடு மட்டுமல்லாமல் தென்னைமரத்தில் தேங்காய் விளைச்சலையும் குறைத்துவிடும். இந்த பூச்சிகளை அளிக்க விளக்கு பொறிகளை பயன்படுத்தலாம் என்றும், வேப்பிலை கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல், மீன் எண்ணெய் சோப்பு கரைசல், ஆகியவை பயன்படுத்தலாம் என்றும் பரமத்திவேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.  மேலும் மைதா மாவு பசையை தயாரித்து தென்னை ஓலைகளில் நன்கு தெளித்தால் பூச்சிகளினால் ஏற்படும் கரும்புள்...

திருச்செங்கோட்டில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்ததால் 5 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்

Image
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  முழு ஊரடங்கில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்படாது எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் நேற்று, நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது. மேலும் வெளியூர்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக பஸ்களும் இயக்கப்பட்டன. இந்தநிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு என்பதாலும், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதாலும் நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மற்றும் இறைச்சி, ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றதை காணமுடிந்தது...

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்; போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கை

Image
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழக அரசால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனாவின்🦠 தாக்கம் குறையாத காரணத்தால் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், பால் வினியோகம் மற்றும் குடிநீர் வினியோகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை தோட்டக்கலைத்துறை மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு அருகே கொண்டு சென்று விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம். முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்க...

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பான தகவல் அளிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Image
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக இல்லங்களிலோ அல்லது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலோ பாதிக்கப்பட்டு இறந்துபோன பெற்றோர்கள் யாரேனும் இருந்தால் அவர்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும். எனவே அவ்வாறு இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தொடர்பாக முகவரி, தொலைபேசி ஆகியவற்றை விதிமுறைகளுக்குட்பட்டு அவ்வப்போது  04286 - 233103 79047 16516  8760 595020 என்ற எண்ணில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் 1098 என்ற எண்ணில் சைல்டுலைன் மற்றும் குழந்தைகள் நலக்குழு, நாமக்கல் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.  தவிர, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பெருந்தொற்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆரோக்கிய தொகுப்பு வழங்கப்பட்டது

Image
நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நாமக்கல் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் ஆரோக்கிய தொகுப்பை நாமக்கல் செயலாளர் C.R.இராஜேஷ் கண்ணன் வழங்கினார்.  இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவிக்கையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொரானா பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறும்நபர்களுக்கு ரெட்கிராஸ் சார்பாக துண்டு, சோப் ,பெட்டி, பற்பசை, பல் துலக்கும் பிரஷ், 100 மி. லி சானிடைசர் ,இரண்டு அடுக்கு துணி முக கவசம் அடங்கிய நிவாரண ஆரோக்கிய தொகுப்பை நாமக்கல் கோட்டாட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.  மேலும் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நிவாரண ஆரோக்கிய தொகுப்பை சித்த மருத்துவர் பூபதி ராஜா அவர்களிடம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று விரைவில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

Image
நாமக்கல் மாவட்ட மக்கள் நலனில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் அவர்களிடம் சட்ட மன்ற தேர்தலின் போது நாமக்கல் பெஸ்ட்ரம் பள்ளி அருகே வசிக்கும் பொதுமக்கள் இப்பகுதியில் பல வருடமாக குடிநீர் பிரச்சனையாக உள்ளது என கோரிக்கை வைத்தனர். நேற்று வெள்ளிக்கிழமை (21.05.2021) மதியம் அப்பகுதிக்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் நகராட்சி பொறியாளர் இராஜேந்திரன் மற்றும் உதவி பொறியாளர் கார்த்திக் ஆகியோரிடம் குடிநீர் தட்டுபாட்டினை உடனடியாக சரிசெய்ய அறிவுறித்தினார், இதில் திமுக மாநில நிர்வாகி மணிமாறன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் உடன்இருந்தனர். கோரிக்கையை ஏற்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கிய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

முக்கிய செய்தி புதிய கட்டுப்பாடுகள் குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்

Image
முக்கிய செய்தி புதிய கட்டுப்பாடுகள் குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் புதிய கட்டுப்பாடுகள் நாமக்கல் மாவட்டம் முழுக்க அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், இவை முதல் கட்டமாக நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக மாவட்டம் முழுக்க அமல்படுத்தப்படும் என நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு.கோட்டைக்குமார் தெரிவித்துள்ளார்! ஜெயகுமார் வெள்ளையன் மாவட்ட தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்.

நாமக்கல் மாவட்டத்தில் தடங்கலின்றி விவசாய பணி: அலுவலர்கள் தொடர்பு எண் வெளியீடு

Image
ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு தடங்கலின்றி விவசாய பணிகள் மேற்கொள்ள அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொ) ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை. தடங்கலின்றி விவசாய பணிகள் மேற்கொள்ளவும், தட்டுப்பாடின்றி உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதைகள் கிடைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.  அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களும் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டம், உயிர் உரங்கள் வழங்கிட, காலை, 9:00- 12:00 மணி வரை திறந்திருக்கும். தனியார் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களும், காலை, 6:00- 10:00 மணி வரை திறந்திருக்கும்.  பூச்சி நோய் தாக்குதல் தென்படும் பட்சத்தில் விவசாயிகள் தங்கள் மொபைல் போன்மூலம் கேமராவில் தெளிவாக படம் எடுத்து உழவன் செயலிக்கு அனுப்பும் பட்சத்தில் அதற்கான தீர்வு விவசாயிகளின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருள் தேவை மற்றும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்ப...

முக்கிய செய்தி நாமக்கல் மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறக்க கூடாது

Image
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  மளிகை மற்றும் காய்கறி கடை உரிமையாளர்களுக்கு முக்கிய அவசர ஆலோசனை கூட்டம் இன்று 21/05/2021 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோட்டைக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  இதில் மளிகை மற்றும் காய்கறி விற்பனையாளர்கள்  கலந்துகொண்டனர். இதுகுறித்து பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்று 21/05/2021 மாலை 4 மணியளவில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோட்டைக்குமார் மற்றும் நாமக்கல் நகராட்சி ஆணையர் திரு.பொன்னம்பலம் ஆகியோர் மளிகை மற்றும் காய்கறி வியாபாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டதில் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. 1. நாமக்கல் மாவட்ட முழுக்க உள்ள அனைத்து மளிகை மற்றும் காய்கறி கடைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக அடைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் டோர் ...