காய்கறி விற்பனையில் குறை இருந்தால் புகார் செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு
காய்கறி விற்பனையில் குறைபாடுகள் இருந்தால் புகார் செய்ய மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடமிருந்து காய்கறி மற்றும் பழங்களை கொள்முதல் செய்து வாகனங்களில் சென்று விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை சுமார் 500 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இச்சேவை தொடர்பான குறைபாடுகளை தெரிவிக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் மையத்தை
94891 34961 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment