நாமக்கல் மாவட்டத்தில் தடங்கலின்றி விவசாய பணி: அலுவலர்கள் தொடர்பு எண் வெளியீடு

ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு தடங்கலின்றி விவசாய பணிகள் மேற்கொள்ள அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இதுகுறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொ) ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை. தடங்கலின்றி விவசாய பணிகள் மேற்கொள்ளவும், தட்டுப்பாடின்றி உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதைகள் கிடைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களும் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டம், உயிர் உரங்கள் வழங்கிட, காலை, 9:00- 12:00 மணி வரை திறந்திருக்கும். தனியார் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களும், காலை, 6:00- 10:00 மணி வரை திறந்திருக்கும். 

பூச்சி நோய் தாக்குதல் தென்படும் பட்சத்தில் விவசாயிகள் தங்கள் மொபைல் போன்மூலம் கேமராவில் தெளிவாக படம் எடுத்து உழவன் செயலிக்கு அனுப்பும் பட்சத்தில் அதற்கான தீர்வு விவசாயிகளின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருள் தேவை மற்றும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் கீழ்க்காணும் 

வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை 
தொடர்பு கொள்ளலாம். 
நாமக்கல்- அன்புச்செல்வி- 9965557050

புதுச்சத்திரம்
பேபிகலா- 9487571969

எருமப்பட்டி
கவிதா-9788004310

 சேந்தங்கலம்
 இந்திராணி-9751985515

மோகனூர்
ஜெயமாலா-9600796309

ராசிபுரம்
சித்திரைசெல்வி- 9965593026

 நாமகிரிப்பேட்டை
ராஜேஸ்வரி- 8903633164

வெண்ணந்தூர்
 யுவராஜ் - 9965158048.

எலச்சிபாளையம்
லோகநாதன்- 8870288415


கொல்லிமலை
கவிதா- 9965593300

மல்லசமுத்திரம் 
தனம்-9842458179

திருச்செங்கோடு
ஜெயமணி- 9894402957

பள்ளிபாளையம்
 கலைச்செல்வி- 8870288416

பரமத்தி
ராதாமணி- 9842427788

கபிலர்மலை
கோவிந்தசாமி- 9994881725. 
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்