கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார். 


அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மையம் (யூனிட்) தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் சில தினங்களில் தொடங்கப்படும்.

மேலும், 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பிருக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 28,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது