நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 931 ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டன

கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.


இதையொட்டி 2-வது நாளாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பஸ், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை, பஸ் நிலையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

மாவட்டம் முழுவதும் மருந்து கடைகளை தவிர இதர கடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 931 ரேஷன் கடைகளும் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன.

பின்னர் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதுவரை கொரோனா நிவாரண தொகை பெறாதவர்களுக்கும் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. இருப்பினும் ரேஷன்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்து இருந்தன.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்