கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பான தகவல் அளிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


நாமக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக இல்லங்களிலோ அல்லது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலோ பாதிக்கப்பட்டு இறந்துபோன பெற்றோர்கள் யாரேனும் இருந்தால் அவர்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும்.

எனவே அவ்வாறு இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தொடர்பாக முகவரி, தொலைபேசி ஆகியவற்றை விதிமுறைகளுக்குட்பட்டு அவ்வப்போது
 04286 - 233103
79047 16516 
8760 595020 என்ற எண்ணில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் 1098 என்ற எண்ணில் சைல்டுலைன் மற்றும் குழந்தைகள் நலக்குழு, நாமக்கல் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். 

தவிர, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்