பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று விரைவில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

நாமக்கல் மாவட்ட மக்கள் நலனில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் அவர்களிடம் சட்ட மன்ற தேர்தலின் போது நாமக்கல் பெஸ்ட்ரம் பள்ளி அருகே வசிக்கும் பொதுமக்கள் இப்பகுதியில் பல வருடமாக குடிநீர் பிரச்சனையாக உள்ளது என கோரிக்கை வைத்தனர்.


நேற்று வெள்ளிக்கிழமை (21.05.2021) மதியம் அப்பகுதிக்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் நகராட்சி பொறியாளர் இராஜேந்திரன் மற்றும் உதவி பொறியாளர் கார்த்திக் ஆகியோரிடம் குடிநீர் தட்டுபாட்டினை உடனடியாக சரிசெய்ய அறிவுறித்தினார், இதில் திமுக மாநில நிர்வாகி மணிமாறன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் உடன்இருந்தனர்.

கோரிக்கையை ஏற்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கிய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

Comments